வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் நடந்த இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது…!!

Read Time:6 Minute, 18 Second

201607131028026302_Veeravanallur-bus-stand-murder-case-2-youths-arrest_SECVPFநெல்லை மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த திருப்புடைமருதூர் அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது47). அ.தி.மு.க. கிளை செயலாளர். இவரது சகோதரர்கள் மாரியப்பன் (44), சேதுராமலிங்கம் (42). இவர்கள் 3 பேரும் விவசாயம் செய்து வந்தனர். வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணப்பன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 15.8.2015 அன்று முக்கூடல் பெட்ரோல் பங்க் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த கண்ணப்பன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாலசுப்பிரமணியன், மாரியப்பன், சேதுராமலிங்கம் ஆகிய 3 பேரையும் வீரவநல்லூர் போலீசார் கைது செய்தனர். சிறையிலிருந்து அண்ணன்- தம்பிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த கொலை வழக்கு சேரன்மகாதேவி கோர்ட்டில் நடந்து வருகிறது.

கொலை வழக்கு வாய்தாவுக்கு நேற்று பாலசுப்பிரமணியன், மாரியப்பன் ஆகிய 2 பேரும் சேரன்மகாதேவி கோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டில் நடந்த வழக்கில் இருவரும் ஆஜராகி விட்டு சீதபற்பநல்லூர் செல்வதற்காக குமரியில் இருந்து சேரன்மகாதேவி வழியாக பாபநாசம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினர்.

அந்த பஸ் வீரவநல்லூர் பஸ் நிலையத்திற்கு வந்தவுடன் மாரியப்பனும், பாலசுப்பிரமணியனும் கீழே இறங்குவதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் பஸ்சின் பின்புற படிக்கட்டில் இறங்க முயன்ற மாரியப்பனை சரமாரியாக வெட்டியது.

இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியன் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து பஸ்சுக்குள்ளேயே அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டது.

இந்த இரட்டைக்கொலை சம்பவத்தால் வீரவநல்லூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் வீரவநல்லூர் போலீசார் இரட்டைக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட கண்ணப்பன் கொலைக்கு பழிக்கு பழியாக அண்ணன்-தம்பி இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இக்கொலை சம்பவத்தில் கண்ணப்பனின் உறவினர்களே ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருப்புடைமருதூர் அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்த பாண்டி என்ற கருத்தப்பாண்டி, அவரது தம்பி பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட கண்ணப்பனின் உறவினர்கள். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதன் விபரம் வருமாறு:-

எங்களது உறவினர் கண்ணப்பன் குடும்பத்துக்கும் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினருக்கும் இடையே வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதில் கண்ணப்பனை, பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது சகோதரர்கள் குத்திக்கொலை செய்தனர். இதற்கு பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தை பழிவாங்க காத்திருந்தோம்.

அதன்படி கோர்ட்டு வாய்தாவுக்கு சென்று வந்த பாலசுப்பிரமணியன் அவரது தம்பி மாரியப்பன் ஆகிய இருவரையும் வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் வைத்து வெட்டிக்கொன்றோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய கண்ணப்பனின் சகோதரர்கள் உள்பட சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

2-வது நாளாக திருப்புடைமருதூர், சீதபற்பநல்லூர் பகுதிகளில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலியில் பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!!
Next post திருப்பூர் டாக்டர் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: தந்தை வலியுறுத்தல்..!!