உங்களுக்கு தெரியுமா?.. விரல் சூப்பினால், நகம் கடித்தால் பலன் உண்டாம்…!!

Read Time:1 Minute, 56 Second

finger_swip_002.w540இறந்த பின் மனித உயிர் பிரிந்து செல்லும் நேரடி காட்சி!கையை சூப்பும் அல்லது நகங்களைக் கடிக்கும் குழந்தைகல், கிருமிகளுக்கு பழகிவிடுவதால், பிற்காலத்தில் வளரும்போது அவர்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவது குறைவு என்று நியுசிலாந்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகிறது.

சுமார் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வயதானவர்களாக வளரும் வரை கண்காணித்த இந்த ஆய்வு இந்த இரு பழக்கங்களையும் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஒவ்வாமை வருவது சற்று அதிகமாகக் காணப்படுவதாகவும், அந்தப் பழக்கங்களில் குறைந்தது ஒன்றையாவது வைத்திருந்தவார்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவாகவும் இருந்ததாகக் கூறியது.

இரண்டு பழக்கங்களையும் வைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படாத பலன்கள் அதிகமாக இருந்தன.

ஆனால் கட்டைவிரலை சூப்பும் பழக்கமோ அல்லது நகத்தைக் கடிக்கும் பழக்கமோ இந்த ஒவ்வாமையுடன் தொடர்புள்ள வியாதிகள் ஏற்படுவதைக் குறைக்கின்றன என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

குழந்தைகள் தங்கள் கைகளைக் கழுவ ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க சஞ்சிகையான ‘குழந்தை நலம்’ (பேடியாட்ரிக்ஸ்) என்ற இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பூர் டாக்டர் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: தந்தை வலியுறுத்தல்..!!
Next post வேகமான நடைப்பயிற்சி கேன்சர் நோயாளிகளுக்கு நல்லது…!!