உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க…!!

Read Time:3 Minute, 41 Second

11-1468212819-1healthbenefitsofblendercashewbananamilkandbluberriessmoothieஇன்றைய வேலைப்பளு நிறைந்த உலகில் பெரும்பாலான நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

ஏன், சில சமயங்களில் பள்ளி, கல்லூரிகளில் தரப்படும் அழுத்தத்தால் இப்போது குழந்தைகள் மத்தியில் கூட இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். கண்பார்வை, இதய நலன், செரிமானம் சிறக்க இந்த இந்த ஜூஸ் குடிங்க!

மேலும், உட்கார்ந்தே செய்யும் வேலை முறை, இடைவேளையில் உண்ணும் துரித உணவுகள் போன்றவை உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க முக்கிய காரணியாக விளங்குகின்றன.

இது காலப்போக்கில் உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணியாக திகழ்கிறது. இந்த மூன்றுக்கும் தீர்வளிக்கும் ஜூஸ் தான் இந்த முந்திரி, வாழைப்பழம், பால் மற்றும் ப்ளூபெர்ரி கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்தி…

தேவையான பொருட்கள்:

1) வாழைப்பழம் – 1

2) முந்திரி – 60 கிராம்

3) ப்ளூபெர்ரி – 120 கிராம்

4) பால் – 180 மில்லி லிட்டர்

வைட்டமின்கள்:

முந்திரி, வாழைப்பழம், பால் மற்றும் ப்ளூபெர்ரி ஸ்மூத்தீயின் மூலம் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்., வைட்டமின் A, B, B12, B2, B9, C, E மற்றும் K

செய்முறை:

1) முந்திரியை இதமான நீரில் ஒருமணிநேரம் ஊறவைக்கவும்.

2) வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

3) வாழைப்பழம் மற்றும் ப்ளூபெர்ரி குளுமையாக (ஃப்ரிட்ஜில்) இருந்தால் அவை, சற்று இதமாக ஆகும் வரை பத்து நிமிடம் வெளியே வைக்கவும்.

செய்முறை:

4) வாழைப்பழம், ப்ளூபெர்ரி மற்றும் முந்திரியை கொஞ்சம், கொஞ்சமாக போட்டு அரைக்கவும்.

5) பிறகு கடைசியில் பாலை சேர்த்து 20 நொடிகள் நன்கு கலக்குங்கள்.

நன்மைகள்:

1) இந்த ஸ்மூத்தி சிறுநீர் அழற்சி உண்டாகாமல் தடுக்க உதவுகிறது.

2) அன்றாடம் இந்த ஸ்மூத்தி யை குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

3) மேலும், இந்த ஸ்மூத்தியின் பயன் மூலமாக உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க முடியும்.

நன்மைகள்:

4) இது கட்டிகள் உண்டாகாமல் இருக்கவும், ஆண்டி-ஆக்ஸிடன்ட்டாகவும் பயனளிக்கிறது.

5) இந்த ஸ்மூத்தி கண் மற்றும் எலும்புகளுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

6) மேலும், இந்த ஸ்மூத்தியை தினமும் குடித்து வந்தால் நரம்பு மண்டலம் வலுபெறும், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து உடல் எடை குறையும்.

குறிப்பு:

இந்த ஸ்மூத்தியில் உங்களுக்கு வேண்டுமானால் ஓரிரு புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.: பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!
Next post 20 கிலோ வெங்காயம்… ஒரே ஒரு நபர்… ஆனால் வெட்ட எடுப்பதோ வெறும் 2 நிமிடங்கள்…!! வீடியோ