ஆம்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து: கணவன்-மனைவி பலி – 3 மகள்கள் காயம்…!!

Read Time:4 Minute, 51 Second

201607110953415284_Car-collision-with-a-lorry-in-Ambur-Husband-kills-wife--3_SECVPFஆம்பூர் அருகே இன்று லாரி மீது கார் மோதியதில் கணவன், மனைவி பரிதாபமாக இறந்தனர். மேலும் அவர்களது 3 மகள்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

ஆம்பூர் அருகே உள்ள மோட்டுக் கொல்லையை சேர்ந்தவர் சுகேல் அகம்மது (வயது 45). ஆம்பூரில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி ஷாயிதா (35). இவர்களுக்கு சானியா பாத்திமா (14), சமீரா பாத்திமா (9), சாயியா பாத்திமா (6) மற்றும் மேலும் 1½ வயதில் ஒரு பெண் குழந்தை என 4 மகள்கள் உள்ளனர்.

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக, கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுகேல் அகம்மது தனது மனைவி மற்றும் 4 மகள்களுடன் பெங்களூரில் வசிக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு காரில் சென்றார். ரம்ஜான் கொண்டாட்டம் முடிந்த நிலையில், நள்ளிரவு ஊர் திரும்பினர். சுகேல் அகம்மது காரை ஓட்டினார்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் வாணியம்பாடியை கடந்து பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தது. ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் பஸ் நிறுத்தத்தில் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த சுகேல் அகம்மது மற்றும் அவருடைய மனைவி ஷாயிதா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

அவர்களது மகள்கள் சானியா பாத்திமா, சமீரா பாத்திமா, சாயியா பாத்திமா ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். ஒன்றரை வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது.

தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 மகள்களையும் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, 3 பேரும் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து அதிகாலை நேரத்தில் நேர்ந்ததால், காரை ஓட்டி வந்த சுகேல் அகம்மது தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே, விபத்து ஏற்பட்டிருக்கும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

கார் மோதிய லாரி நள்ளிரவு முதலே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரிக்கு முன்பாக ஏராளமான லாரிகள் நின்றிருந்தன.

இரவு நேரங்களில் தூக்க கலக்கம் ஏற்பட்டால் சாலையோரத்தில் லாரிகள் நிறுத்தப்படுகிறது. அப்படி நிறுத்தப்படும் லாரிகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, இதுபோன்ற உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளுக்கும் காரணமாகிறது.

எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் உள்பட போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளின் ஓரத்தில் லாரிகளை நிறுத்த போலீசார் அனுமதிக்க கூடாது. சர்வீஸ் சாலையோரம் அல்லது சாலையை விட்டு 10 மீட்டர் தள்ளியே லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும்.

விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளும் விழிப்புடன் இருப்பது அவசியம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்த, பசிலை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை…!!
Next post பெருந்துறை அருகே 7 மயில்கள் மர்ம முறையில் இறப்பு…!!