தினமும் உடல் ரீதியான தீண்டுதலில் ஈடுபடுவதால் உண்டாகும் 5 நன்மைகள்…!!
தீண்டுதல் என்பது ஏதோ இச்சை உணர்வல்ல. ஆம், கணவன், மனைவிக்குள் தீண்டுதல் என்பது அவர்களது உறவை இணைக்கும், இணக்கத்தை அதிகரிக்க கூடிய ஓர் சக்தி அல்லது ஊன்றுகோல் என்று கூறலாம்.
வெறும் உடலுறவு மட்டுமே எப்படி நிலையான இல்லறம் ஆகாதோ. அதே போல உடலுறவு இல்லாத இல்லறமும் நிலையாக இருக்காது. உடலும், மனதும் சரியாக இணைந்த உறவே ஓர் முழுமையான இல்லற வாழ்க்கை.
இதற்காக தான் மன ரீதியான, உடல் ரீதியான முதிர்ச்சி சரியாக கொண்டு ஆண், பெண் இல்லறத்தில் பயணிக்க வேண்டும் என நமது முன்னோர்கள் வயதி வித்தியாசம் அவசியம் என கூறினார். இனி, தினமும் உடல் ரீதியான தீண்டுதல்கள் இருக்க வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் பற்றி பார்க்கலாம்…
காரணம் #1
புத்துணர்ச்சி! நீங்கள் உடல்ரீதியாக மட்டுமின்றி, மனம் ரீதியாகவும் சோர்வாக இருக்கிறீர்கள், சோகம் உங்களை சூழந்துள்ளது அதை தவிர்க்க வேண்டும் என்றால், நீங்கள் தினமும் துணையுடன் தீண்டுதல்களில் ஈடுபடுவது சரியான தீர்வை அளிக்கும். வெறும் உறவுக் கொள்வதால் என்பதை தாண்டி, அந்த நேரத்தில் உங்களுக்கு கிடக்கும் அரவணைப்பு ஓர் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
காரணம் #2
மனநல மேன்மை! உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது, தோல்வி பயம் தொற்றிக் கொண்டுள்ளது எனில், நீங்கள் தினமும் தீண்டுதலில் ஈடுபட வேண்டும். இது, உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை போக்கி, மனநலம் மேலோங்க உதவும்.
காரணம் #3
உறவில் இணக்கம்! உங்கள் இருவருக்குள்ளேயே மனஸ்தாபம் இருக்கிறது, சரியான இணக்கம் இல்லை எனில், நீங்கள் தினமும் தீண்டுதலில் ஈடுபட வேண்டும். இது, உங்கள் உறவு பாலத்தை இணைக்கும், இறுக்கமடைய செய்யும். உங்கள் இருவருக்குள் மீண்டும் ஓர் மறுமலர்ச்சி உண்டாக பயனளிக்கும்.
காரணம் #4
தனிப்பட்ட தேவைகள்! அரவணைப்பு, அன்பு, அக்கறை என்பதை தாண்டி தீண்டுதல் என்பது தம்பதிகளுக்கு மத்தியில் ஓர் தனிப்பட்ட தேவையும் கூட. யோகாவிற்கு இணையான மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை கொண்டது தாம்பத்தியம். எனவே, உங்கள் உறவில் இந்த தீண்டுதலுக்கு தடா விதிப்பதும், நீண்ட இடைவேளை எடுத்துக் கொள்வதும் தவறு.
காரணம் #5
தொடர்பு! நாம் பேசும் மொழியை தான், கை ஜாடை, கண் ஜாடை என்பது போல உடல் மொழியும் இருக்கிறது. இது தம்பதிகளுக்கு தெரிந்த விஷயம். இந்த உடல் மொழிக்கு ஓர் சக்தி உள்ளது. இதை தம்பதிகள் இழந்துவிட கூடாது. இந்த உடல் மொழியானது அன்பை, அரவணைப்பை அதிகரிக்க கூடியது. எனவே, இதை வலுப்படுத்தும் தீண்டுதலை கைவிட்டுவிட வேண்டாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating