மலையகத்தில் காற்றுடன் கூடிய கடும் மழை..!!

Read Time:2 Minute, 10 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)மலையகத்தில் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிகூடிய காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

நுவரெலியா, ஹற்றன், மஸ்கெலியா, பொகவந்தலாவ, நானுஓயா, அக்கரபத்தனை, டயகம, தலவாக்கலை, லிந்துலை போன்ற பகுதியில் பனிமூட்டம் காணப்படுகின்றது. இதன் காரணமாக போக்குவரத்து பொலிஸார் வாகனங்களில் முன் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை பாதையில் செலுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவிக்கபட்டுள்ளது.

நானுஓயா பொலிஸ் பகுதிக்குட்பட்ட எடின்புரோ தோட்டத்தில் இன்று அதிகாலை வீசிய பலத்த காற்றினால் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்தோட்ட மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம நகரத்திலிருந்து போடைஸ் வழியாக ஹற்றன் செல்லும் பிரதான பாதையில் வெடிப்புகள் காணப்படுவதால் இப்பாதையின் ஊடாக வாகனத்தினை செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு அக்கரபத்தனை பொலிஸ் நிலைய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். தேயிலை மலைகளில் தொழில் செய்யும் போது ஆபத்தான இடங்கள் மற்றும் மரங்கள் காணப்படும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்குமாறு தொழிலாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்ம நபர் தற்கொலை..நடந்தது என்ன?
Next post வீட்டு கூரை விழுந்ததில் மாணவி காயம்…!!