அஜீரணக் கோளாறை சரிசெய்யும் சில நாட்டு வைத்தியங்கள்…!!

Read Time:3 Minute, 47 Second

08-1467975067-1-ginger-juice-with-honeyஉணவு மிகவும் சுவையாக இருந்தால், நன்கு வயிறு முட்ட சாப்பிடும் பழக்கம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும். அதிலும் ரம்ஜான் பண்டிகை முடிந்த நிலையில், பலரது வயிறு பிரியாணியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இப்படி அஜீரண பிரச்சனை ஒருவருக்கு ஏற்பட்டால், அவர் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதோடு, கடுமையான வயிற்று வலி, வயிற்று உப்புசம் போன்றவற்றையும் சந்திப்பார்கள். மொத்தத்தில் வயிறு கெட்டுப் போனது போல் இருக்கும்.

நீங்கள் அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்படுபவராயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில கை வைத்தியங்கள் சற்று உதவியாக இருக்கும். வேண்டுமானால் தொடர்ந்து படித்துப் பின்பற்றி பாருங்கள்.

எலுமிச்சை இஞ்சி ஜூஸ்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, அத்துடன் சுவைக்கு தேன் கலந்து பருகி வந்தால், அஜீரண கோளாறில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மோர்

ஒரு டம்ளர் மோரில் வறுத்த மல்லியை பொடி செய்து சேர்த்து கலந்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

சோம்பு

மசாலா அதிகம் சேர்த்த உணவுகளை உட்கொண்ட பின், சிறிது சோம்பை வாயில் போட்டு மென்றால், அஜீரண கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஓமம்

ஒரு டம்ளர் நீரில் ஓமத்தை கையால் நசுக்கி போட்டு கலந்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நொடியில் விலகும்.

சீரகம்

சீரகத்தை வறுத்து பொடி செய்து, ஒரு டீஸ்பூன் சீரகப் பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.

தேநீர்

உணவு உட்கொண்ட பின் ஒரு டம்ளர் மூலிகை தேநீர் அல்லது க்ரீன் டீ குடித்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

புதினா நீர்

அஜீரண கோளாறு இருக்கும் வேளையில், ஒரு டம்ளர் நீரில் புதினா சாற்றினை சேர்த்து கலந்து பருக, உடனே நிவாரணம் கிடைக்கும்.

கொத்தமல்லி ஜூஸ்

ஒரு டம்ளர் மோரில் 2 டீஸ்பூன் கொத்தமல்லி ஜூஸ் சேர்த்து பருகினால், அஜீரண கோளாறில் இருந்து உடனடியாக விடுபட முடியும்.

இஞ்சி

வயிறு சரியில்லாத போது, ஒரு துண்டு இஞ்சியை உப்பில் தொட்டு, வாயில் போட்டு மெதுவாக மென்று அதன் சாற்றினை விழுங்க, செரிமான நீரின் உற்பத்தி தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனை உடனே நீங்கும்.

பேக்கிங் சோடா

1/2 டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து அஜீரண கோளாறு இருக்கும் நேரத்தில் பருகினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அப்பளமாக நொருங்கிய கார்… உள்ளே இருந்த வீரருக்கு என்னவாகியிருக்கும்…!! வீடியோ
Next post நடுரோட்டில் காதலியின் கண்முன்னே கொலை செய்யப்படும் காதலன்… மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ