கடையநல்லூரில் கள்ளக்காதலனுக்கு 13 வயது மகளை திருமணம் செய்து வைக்க முயன்ற பெண்..!!

Read Time:4 Minute, 57 Second

201607081240370994_13-year-old-daughter-married-illegal-boyfriend-in_SECVPFகடையநல்லூரை சேர்ந்தவர் கலையரசி (வயது38) பெயர் மாற்றப்பட்டுள்ளது. சமையல் வேலை செய்து வருகிறார். கலையரசியின் கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கலையரசிக்கும், புளியங்குடியை சேர்ந்த சமையல் மாஸ்டர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் கலையரசியின் வீட்டிற்கு சமையல் மாஸ்டர் வந்து சென்றுள்ளார். அப்போது 8-ம்வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த கலையரசியின் மகள் மீது அவரின் பார்வை விழுந்துள்ளது. அவளையும் அடைய வேண்டும் என சமையல் மாஸ்டர் திட்டமிட்டுள்ளார்.

அவர், கலையரசியிடம் ‘உனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடு, உன் கடன் முழுவதையும் நான் அடைத்து விடுகிறேன்’ என ஆசை காட்டியுள்ளார். இதனால் கலையரசியும் தனது மகளை சமையல் மாஸ்டருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கலையரசி தனது மகளை அழைத்துக் கொண்டு சமையல் மாஸ்டருடன் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு விடுதியில் மூன்று பேரும் தங்கி உள்ளனர். அப்போது கலையரசின் சம்மதத்துடன் அவரது மகளிடம் சமையல் மாஸ்டர் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். மீண்டும் இது போல் நடக்க முயன்றால் கூச்சல் போட்டுவிடுவேன் என அவர் கூறியதால் சமையல் மாஸ்டர் அங்கிருந்து வெளியில் சென்றார்.

பின்னர் மூன்று பேரும் பஸ்சில் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது, விரைவில் உனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடு என சமையல் மாஸ்டர் கூறியுள்ளார். இதையடுத்து திருமண ஏற்பாடுகளை செய்வதாக கலையரசி அவரிடம் உறுதி அளித்துள்ளார். அவர்கள் இருவரும் பேசியதை அந்த சிறுமி கேட்டுக் கொண்டிருந்தார்.

பெற்ற தாயே தன்னை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுவதை கண்ட சிறுமி அவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என முடிவு செய்தார். மதுரையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் தனது தம்பியை அழைத்துக் கொண்டு சுரண்டையில் உள்ள தனது பள்ளி ஆசிரியை வீட்டிற்கு சென்றார். அங்கு ஆசிரியையிடம் நடந்தவற்றை சொல்லி அந்த சிறுமி அழுதாள்.

அந்த ஆசிரியை ‘சைல்டு லைன்-1098’- எண்ணுக்கு போன் செய்து அவர்களிடம் புகார் அளித்தார். இதையடுத்து நெல்லை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அதிகாரி சந்திரா கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் சிறுமியையும், அவரது தம்பியையும் கடையநல்லூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை நெல்லை குழந்தைகள் நலக்குழு தலைவர் நளனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

தற்போது நெல்லை சிறுவர்கள் காப்பகத்தில் உள்ள சிறுமியையும் அவரது தம்பியையும் இன்று குழந்தைகள் நல சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க குழந்தைகள் நலக்குழு முடிவு செய்துள்ளது. நீதிமன்றத்தில் சிறுமி அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது.

பெற்ற தாயே தனது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குவாரியில் மண் சரிந்து விபத்து… உயிருடன் புதைந்த 3 தொழிலாளர்கள்… மதுரையில் சோகம் – வீடியோ
Next post ஆண்கள் ஏன் ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் அணியக் கூடாது?