கண்பார்வை, இதய நலன், செரிமானம் சிறக்க இந்த இந்த ஜூஸ் குடிங்க!

Read Time:3 Minute, 40 Second

08-1467955728-ingredientsஇன்று பரவலாக பெரும்பாலான மக்கள் கூறும் உடல்நல பிரச்சனைகள் சிலவன இருக்கின்றன, இளம் வயதிலேயே கண் பார்வை குறைபாடு, செரிமான கோளாறுகள், இதய நலன் குறைபாடு, உடல் பருமன், இரத்தம் சுத்தமின்மை, பல் வலி மற்றும் சில.

இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு இருக்கிறதா? இருந்தால் அது என்ன? இருக்கிறது! நீங்கள் இயற்கை உணவுகளை உண்ண வேண்டியது தான் அது. நமது வாழ்வில் இன்று நாம் உண்ணும் பல உணவுகள் ரசாயன கலப்பு உள்ள ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகள் தான்.

உங்கள் உணவுமுறையில் காய்கறி, பழங்களை சரியாக சேர்த்துக் கொண்டாலே இவற்றுக்கு எல்லாம் நல்ல தீர்வு காண முடியும். மேலும், இந்த பேரிக்காய், ஆப்பிள், அப்ரிகோட் மற்றும் சோயா தயிர் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸும் பல சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் உண்டாகாமல் இருக்க பயனளிக்கிறது.

இனி, இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது மற்றும் இதன் நன்மைகள் என்னென்ன என்று பாப்போம்….

தேவையான பொருட்கள்:

பேரிக்காய் – 1

ஆப்பிள் – 1

அப்ரிகோட் – 4

ஐஸ் கியூப் – 8

சோயா தயிர் – 1 கப்

செய்முறை:

1)பேரிக்காயின் நடுப்பகுதியை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2)ஆப்பிளின் நடுப்பகுதியை நீக்கிவிடவும், பிறகு ஆப்பிளை ஸ்மூத்தாக ஜூஸ் போன்று அரைத்துக்கொள்ளவும்.

3)அப்ரிகோட்ட்டின் நடுபகுதியை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

4)அறுத்து வைத்த பேரிக்காய், அப்ரிகோட், ஐஸ் கியூப் மற்றும் சோயா தயிர் போன்றவற்றை ஒன்றாக நன்கு கலக்குங்கள்.

5)பிறகு முன்பு அரைத்து வைத்த ஆப்பிள் ஜூஸ் மற்றும் இதையும் ஒன்றாக கலக்குங்கள்.

நன்மைகள்:

ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்கும் ஆஸ்துமாவை எதிர்க்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்க உதவும் கட்டிகள் உண்டாகாமல் இருக்க பயனளிக்கும்

நன்மைகள்:

இதயம் மற்றும் பற்களின் வலிமையை மேலோங்க செய்யும். இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய உதவும் செரிமானம் சிறக்க உதவும். மலமிளக்க பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும். கண் மற்றும் சருமத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும்.

வைட்டமின் சத்துக்கள்:

பேரிக்காய், ஆப்பிள், அப்ரிகோட் மற்றும் சோயா தயிர் ஜூஸ்-ல் இருக்கும் வைட்டமின் சத்துக்கள்.., வைட்டமின் A, B1, B2, C, E, J மற்றும் K

குறிப்பு:

உங்களுக்கு வேண்டுமானால் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த புதுக்கோட்டை தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை: உறவினர்கள் சோகம்…!!
Next post நீரில் உயிருக்கு போராடிய முதலாளி… நடிப்பு என்று தெரியாமல் ஐந்தறிவு ஜீவன் பட்ட அவஸ்தை…!! வீடியோ