திருமணமான புதிதில் இந்த 2 விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்…!!
பெரிய சண்டைகளை விட, அச்சங்களை விட, சின்ன சின்ன நிராகரிப்பு, எதிர்பாராத சில வார்த்தை வெளிப்பாடுகள் தான் இல்லறத்தில் அணுகுண்டாக வெடித்து, இல்வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன.
சில வீடுகளில் சூழ்நிலை அறியாமல், புரியாமல் நாம் சொல்லும் ஒரு முடியும் (அ) முடியாது என்ற வார்த்தை கூட வீட்டில் சண்டைகள் பூகம்பமாய் வெடிக்க காரணியாக அமைந்துவிடலாம். இது குறித்த ஓர் ஆய்வில் வெளிப்பட்ட இரண்டு விதமான அச்சங்களும், அதனால், தம்பதிகள் மத்தியில் ஏற்படும் மனக்கசப்பு பற்றி இனிக் காண்போம்…
இரண்டு விஷயங்கள்!
சமீபத்தில் டென்னஸி பல்கலைக்கழகத்தில் முதன்மை உளவியலாளர் நடத்திய ஆய்வில்,
1) உணர்வு ரீதியாக மறுப்பு தெரிவித்தல்.
2) உங்கள் துணையின் உணர்வுகளை அறுத்தெறிய முனைதல். என்ற இரண்டு அச்சங்கள் தான் பெருவாரியாக இல்லறத்தில் தம்பதிகள் மத்தியில் மனக்கசப்பு உண்டாக காரணியாக இருக்கிறது.
ஆய்வு!
இந்த ஆய்வில் புதியதாக திருமணமான 217 ஆண் மற்றும் பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இதில், தன்கள் ஏதாவது கேட்டு, அதற்கு தங்கள் துணை மறுப்பு தெரிவிப்பது மிகந்த பதட்டத்தை உண்டாக்குகிறது என கூறியிருக்கின்றனர்.
விருப்பம்:
தாங்கள் எதாவது கேட்டு அல்லது கூறி அதை தங்கள் துணை நிராகரித்துவிட்டாலோ, மறுப்பு தெரிவித்தாலோ, அவருக்கு தங்கள் மீது விருப்பம் இல்லை என்ற எண்ணம் வலுவாக அவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது.
மாறுபட்ட எண்ணங்கள்:
இந்த ஆய்வில் இதுபோன்ற பதட்டம் இல்லறத்தில் உண்டாக காரணம் மாறுப்பட்ட கருத்து என தெரிய வந்துள்ளது. அதாவது ஓர் விஷயத்தில் இருவரும் வெவ்வேறு கருத்து / திட்டங்கள் கொண்டிருக்கலாம்.
அதனால் சாதாரணமாக அவர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். இதை, உணர்வு ரீதியாக எடுத்து செல்வது தான் உறவில் மனக்கசப்பு உண்டாக காரணியாக இருக்கிறது. பதட்டம் அதிகமாக காரணியாக அமைகிறது.
ஆய்வறிக்கை:
ஆய்வறிக்கையின் முடிவில், “எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், முடியாது, விருப்பமில்லை என்று தெரிவிப்பதை தவிர்த்து, அதற்காக காரணம் என்ன? அல்லது அதன் மீது உங்கள் இருக்கும் கருத்தை வெளிப்படுத்தி தெளிவாக பதில் அளிப்பது முக்கியம். மேலும், இது உறவில் பதட்டம் உண்டாகாமல் தடுக்கும்” என்றும் கூறியுள்ளனர்.
மனக்கசப்பு:
முக்கியமாக திருமணமான ஆரம்பக் கட்டத்தில், இதுபோன்ற பதில்கள, ஆண், பெண் இருவர் மத்தியிலும் தவறான புரிதல் உண்டாக காரணியாக இருக்கிறது.
இருவர் மத்தியில் வெவ்வேறான கருத்துகள் இருப்பது தவறில்லை. ஆனால், அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது முக்கியம். முக பாவனையில் இருந்து, குரல் தொனி வரை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.
நிகழ்வு:
நீங்கள் கேட்பது கேளிக்கையாக இருக்கலாமா, தாம்பதியமாக இருக்கலாம். பிடித்த விஷயமாக இருக்கலாம், அது ஓர் பொருளாக இருக்கலாம்.
அதற்கு ஒப்புதல் கூறுவதற்கும், மறுப்பதற்கும் இருவருக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், உங்கள் துணை என்பதால் அதை பக்குவமாக கூற வேண்டும் என்ற கடமையும் உங்களிடம் இருக்கிறது. இதை மறந்துவிட வேண்டாம்.
Average Rating