என்றும் இளமையாக வைத்திருக்கும் சூப்பர் உணவுகளைத் தெரியுமா?

Read Time:3 Minute, 12 Second

youth-05-1467716740நமது உடல் 60 சதவீதம் நீரினால் ஆனது. வியர்க்கும்போது நீரில் பொட்டாசியம், சோடியம் ஆகியவை வெளியேறிவிடும்.

தசைகளின் இயக்கத்திற்கும், ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல்லிற்கு தகவல்களை கடத்துவதற்கும் சோடியம் பொட்டாசியம் மிகவும் முக்கியம். நீர் சரியாக குடிக்காமலிருந்தால் இவற்றில் அளவு குறைந்து தசைப்பிடிப்பு, சதை தொங்குதல், சுருக்கங்கள் போன்றவை ஏற்படும்.

ஆகவே நீர் உடலில் குறையாமலிருக்க, குறிப்பாக வெயில் காலங்களில் நீருடன் , பழச்சாறுகள், நீர்த்தன்மையுள்ள காய்கறிகள், திரவ உணவுகள் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளுதல் மிக முக்கியம்.

நீர்ச்சத்துக் கொண்டுள்ள உணவுகளை சாப்பிட்டால் உடலில் நீர் வற்றாமல் பார்த்துக் கொள்ளலாம். இவை இளமையாகவும் நாம் வாழ மிக முக்கியமான உணவு வகைகள். லெட்யூஸ் : லெட்யூஸில் 95 % நீர் உள்ளது.

அது தவிர்த்து, ப்ரொட்டின், நார்சத்து, மற்றும் ஒமேகா 3 ஆகியய்வற்றை கொண்டுள்ளது. உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக வாழ இந்த சத்துக்கள் தேவை. இது குறைந்த் அளவு கலோரி கொண்டது. இதனை வாங்கி இரு நாட்களுக்குள் உண்டால் அதன் முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.

ப்ருக்கோலி :

ப்ருக்கோலியில் 89 % நீர் உள்ளது. ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வாழ உதவும் சூப்பர் உணவு வகைகளில் புருக்கோலியும் அடக்கம். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் , பீட்டா கரோடின் உள்ளது. புற்று நோயை தடுக்கும் சக்திவாய்ந்த காய் இது.

ஆப்பிள் :

ஆப்பிளில் விட்டமின் ஏ, ஈ, சி ஆகியவை நிறைந்துள்ளன. 86 % நீர்சத்தும் உள்ளன. கொழுப்பை குறைக்கிறது. ஃப்ரீ ரேடிகள்ஸை அழிக்கும் சக்தி பெற்றது.

யோகார்ட் :

ப்ரோபயாடிக் வகை உணவான யோகார்ட் 85% நீர் கொண்டுள்ளது. இவை நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். புரோட்டின் பி காம்ப்ளக்ஸ், கால்சியம் நிறைந்தவை.

அரிசி :

அரிசியில் 70 % நீர் உள்ளது. அதோடு, நார்சத்து, விட்டமின், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை உடலில் நீரிழப்பு ஏற்படும்போது சமன் செய்கிறது.

பிரவுன் அரிசி, சிவப்பு அரிசி ஆகியவை ஆன்டி ஆக்ஸிடென்ட் நார்சத்து மற்றும் பி காம்ப்ளக்ஸ் நிறைந்தவை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உந்துருளி விபத்தில் 20 வயது இளைஞர் சாவு…!!
Next post வங்காளதேசத்தில் குண்டு வெடித்து போலீஸ்காரர் பலி: 11 பேர் படுகாயம்…!!