நெற்றிக்கண்ணுடன் அதிசயக் குழந்தை உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராட்டம்
சென்னை கோஷா ஆஸ்பத்திரியில் நெற்றிக்கண்ணுடன் அதிசயக் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். சென்னை திருவல்லிக்கேணி கோஷா ஆஸ்பத்திரிக்கு (கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை) சனிக்கிழமை ஒரு பெண் வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு ஞாயிற்றுக்கிழமை சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சுமார் 3 கிலோ எடை இருந்தது.
இந்த குழந்தையைபë பார்த்ததும் டாக்டர்களும், நர்சுகளும் வியப்படைந்தனர். காரணம் இந்த குழந்தையின் முகம் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக இருந்தது. கோழி முட்டை வடிவத்தில் இருந்த தலையில் முகம் மட்டும் முற்றிலுமாக மாறுபட்டு காணப்படுகிறது. மூக்கும் வாயும் ஒட்டிப்போய் உள்ளது.
நெற்றிக்கண்
வழக்கமாக இருக்கும் 2 கண்கள் இல்லை. கண் இருக்க வேண்டிய இடத்தின் ஒரு பகுதி மூடியிருக்கிறது. மற்றொரு பகுதி வீங்கிக் காணப்படுகிறது. ஆனால், மூன்றாவது கண் என்று சொல்லப்படும் நெற்றிக்கண்ணுடன் அதிசய குழந்தையாக இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிறந்த சிறிது நேரத்தில் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அதற்குள் நெற்றிக்கண்ணுடன் அதிசய குழந்தை பிறந்திருக்கும் தகவல் தெரிந்து ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பவர்களும், மற்றவர்களும் குழந்தையைப் பார்க்க கூடிவிட்டனர்.
மருத்துவ அதிசயம்
இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், “குறைபாடுடன் பìறந்துள்ள இந்த குழந்தை மருத்துவ உலகின் அதிசயம் என்றே சொல்லலாம். இதுபோன்ற வடிவில் எந்த குழந்தையும் பிறந்தது இல்லை. அப்படி பிறந்தாலும் சிறிது நேரத்துக்குள்ளேயே இறந்துவிடும். இந்த குழந்தை இரண்டு நாட்களுக்கும் மேலாக உயிருடன் இருப்பது மருத்துவ அதிசயமாகவே கருதப்படுகிறது” என்று குறிப்பிட்டனர்.
அதிசய குழந்தையின் மூக்கும், வாயும் ஒட்டிய நிலையில் இருப்பதால் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டது. உடனே மூச்சுவிடுவதற்கு வசதியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கழுத்துக்கு கீழே வழக்கமான குழந்தையைப் போலவே இருக்கிறது.
முதல் குழந்தை
திருமணமாகி 6 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த தம்பதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அதிசய குழந்தை பிறந்தது. இதனால் அந்த தம்பதி மகிழ்ச்சியடைந்தாலும் குறைபாடுடன் பிறந்துவிட்டதால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...