கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக கிளி? அமெரிக்க சட்ட நிபுணர்கள் ஆராய்கின்றனர்…!!

Read Time:2 Minute, 5 Second

1782027சிக்­க­லான கொலை­வ­ழக்கு ஒன்றில் முக்­கிய சாட்­சி­யாக கிளி ஒன்றை அழைப்­பது குறித்து அமெ­ரிக்க சட்­ட­நி­பு­ணர்கள் ஆராய்ந்து வரு­கின்­றனர்.

அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் மாநி­லத்தைச் சேர்ந்த மார்ட்டின் என்­பவர் 2015 ஆம் ஆண்டு அவரின் வீட்டில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

மார்ட்­டினை அவரின் மனைவி கிளென்னா துராம் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்து கொலை செய்­த­தாக அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

இச்­சம்­ப­வத்­தின்­போது கிளென்­னாவும் (48) தன்­னைத்­தானே சுட்­டுக்­கொண்டார். எனினும் அவர் காய­த்­துடன் தப்­பினார்.

இந்­நி­லையில் அவர்­களின் வீட்டில் வளர்க்­கப்­பட்ட ஆபி­ரிக்க சாம்­பல்­நிற கிளி­யொன்று மார்ட்­டினின் மர­ணத்­துக்குப் பின்னர் அடிக்­கடி “டோன்ட் ஷுட்!, டோன்ட் ஷுட்!” (சுடாதே! சுடாதே!) எனக் கூறிக்­கொண்­டி­ருக்­கி­றது.

மார்ட்­டி­னுக்கும் அவரின் மனைவி கிளென்­னா­வுக்கும் இடை­யி­லான மோதலின் இறு­திக்­கட்­டத் தில் கூறப்­பட்ட வார்த்­தை­க­ளையே மேற்­படி கிளி கூறு­கி­றது என மார்ட்­டினின் உற­வி­னர்கள் கரு­து­கின்­றனர்.

21 வய­தான மேற்­படி கிளியை மார்ட்டினின் முன்னாள் மனை­வி­யான கிறிஸ்­டினா தற்­போது வளர்த்து வரு­கிறார்.

இக்­கி­ளியை சாட்சியாக நீதிமன்றத்தில் பயன்படுத்த முடி யுமா? என மிச்சிகன் மாநில வழக்குத் தொடுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய் பகிரங்க மெய்வல்லுநர் போட்டி; இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்…!!
Next post மனைவியின் குறட்டை ; கணவன் விபரீத முடிவு…!!