சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்..!!

Read Time:2 Minute, 52 Second

04-1467631469-3cucumberjuicewithgingermintandapplepreventsyoufromkidneystonesநமது உணவுப் பழக்கவழக்க மாற்றத்தினால் அரிதான நோய்கள் மற்றும் உடல்நல குறைபாடுகள் கூட மிக எளிதாக ஏற்படும் நோய்களாக மாறிவிட்டன. இதில், ஒன்று தான் சிறுநீரக கற்கள். சிறுநீர் கழிப்பதில், சிரமம், சிறுநீர் நிற மாற்றம், குமட்டல், காரணமின்றி தொடர்ந்து வயிறு வலி போன்றவை சிறுநீர் கற்கள் உண்டானதற்கான அறிகுறிகளாக தென்படுகின்றன.

வெள்ளரியுடன் இஞ்சி, ஆப்பிள், புதினா சேர்த்து தயாரிக்கும் இந்த அற்புத ஜூஸை பருகி வந்தால் சிறுநீரக கற்களை மட்டுமின்றி, உடலில் தேவையின்றி சேரும் கொழுப்பையும் கரைக்க் முடியும்.

தேவையான பொருட்கள்:

ஒரு வெள்ளரி

ஓர் சிறிய துண்டு இஞ்சி

கொஞ்சம் புதினா இலைகள் ஒரு ஆப்பிள்

செய்முறை:

அப்பிளின் நடுப்பகுதியை சீவி நீக்கிவிடுங்கள்.

வெள்ளரியின் கசப்பான வேண்டாத பகுதியை நீக்கிடுங்கள்.

பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ் மிக்ஸரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

நன்மைகள்!

சிறுநீரக கற்கள் உண்டாகாமல் காக்கும் ஃப்ளூ காய்ச்சல் வரமால் தடுக்கும்.

ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கும் குமட்டல் ஏற்படாது சளி உண்டாகாமல் தடுக்கும்.

நன்மைகள்!

வயிற்றுப் போக்கை தடுக்கும். கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் காக்கும். உடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் தடுக்கலாம். இதயத்தில் கட்டி உண்டாகாமல் பாதுகாக்கும். செரிமானம் சிறக்கும். உடலில் உள்ள நச்சுக்களை போக்கும்.

நன்மைகள்!

இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பலனளிக்கும். மலமிளக்க பிரச்சனையை சரி செய்யும். நரம்பு மண்டலத்தின் வலுவை அதிகரிக்கும். உடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும்.

வைட்டமின் சத்துக்கள்:

இந்த வெள்ளரி ஜூஸில் வைட்டமின் எ, பி, பி 1, பி 2, பி 6, சி, டி, ஈ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பு! இந்த ஜூஸை, ஜூஸ் எக்ஸ்ட்ராக்டர் மூலமாக தயாரிப்பது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்க மனைவிக்கிட்ட இந்த 12 குற்றங்குறைகள் நீங்கள் கண்டதுண்டா?
Next post கை-கால் வலிப்பிற்கான சில ஆயுர்வேத வைத்தியங்கள்…!!