வங்காளதேசத்தில் 20 பிணைக் கைதிகள் கொலை: தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஆளும் கட்சி பிரமுகர் மகன்..!!

Read Time:2 Minute, 16 Second

201607041508139701_Bangladesh-ruling-Awami-League-leader-son-among-Dhaka_SECVPFவங்காளதேச தலைநகர் டாக்காவில் குல்‌ஷன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக் கைகதிகளாக பிடித்த 20 பேரை சுட்டுக்கொன்றனர்.

இதற்கிடையே 6 தீவிரவாதிகளை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களில் 5 பேரின் போட்டோக்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டது.

அவர்களது பெயர் ஆகாஷ், பிகாஷ், டான், பட்கான் மற்றும் ரிபான் என போலீஸ் மாற்றி வெளியிட்டுள்ளது. இவர்கள் டாக்காவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவர்கள். அனைவரும் நண்பர்கள் ஆவர்.

இவர்களுக்கு 21 முதல் 27 வயது இருக்கும். இவர்களில் 3 பேரின் பெயர்கள் ‘பேஸ்புக்‘கில் வேறுவிதமாக உள்ளது. அவர்களில் ஒருவன் தனது பெயரை ரிப்ராஸ் இஸ்லாமா என வைத்து இருக்கிறான்.

கடந்த பிப்ரவரி 3-ந் தேதியில் இருந்து மாயமாகி விட்டான். அவன் இந்தி நடிகை ஸ்ரதா கபூருடன் கைகுலுக்கும் போட்டோ ‘பேஸ்புக்‘கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோகன் இம்தியாஷ் என்ற தீவிரவாதி ஒரு அரசியல்வாதியின் மகன். இவனது பெயரை போலீசார் டான் என மாற்றி வெளியிட்டுள்ளனர். இவனது தந்தை பெயர் எஸ்.எம்.இம்தியாஷ்கான் பாபுல். இவர் ஆளும் அவாமி லீக் கட்சியின் டாக்கா நகர தலைவராக பதவி வகிக்கிறார். வங்காள தேச ஒலிம்பிக் சங்க துணை செயலாளராகவும் உள்ளார்.

கடந்த ஜனவரி 4-ந்தேதி முதல் இவனை காணவில்லை என பாபுல் போலீசில் புகார் செய்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் வசதி படைத்த பணக்கார குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அப்பாவியை சரமாரியாக தாக்கிய பொலிஸார்…!!
Next post எகிப்து விமான விபத்து: கடலில் இருந்து சிதிலமடைந்த பிரேதங்கள் மீட்பு..!!