உங்கள் படுக்கை விரிப்பை அடிக்கடி மாற்றாமலிருக்கிறீர்களா? இதப்படியுங்க…!!

Read Time:2 Minute, 50 Second

bed-02-1467451793பகல் முழுவதும் கடும் வேலையை செய்துவிட்டு களைப்பாக இரவில் அப்பாடா என படுக்கைக்கு செல்லும்போது எத்தனை குஷியாகிறீர்கள்.

எல்லாருக்குமே இந்த உணர்வு இருக்கும். மறு நாள் மிகப் புத்துணர்ச்சியோடு நம்மை எழச் செய்வது நம் தூக்கம்தான். நீங்கள் தூங்கும்போது எவ்வளவு அமைதியான சூழ் நிலையை விரும்புவீர்கள். அது நியாயம்தான் .

ஆனால் அமைதியைத் தரும் படுக்கையில் விரிக்கும் விரிப்பினை எத்தனை நாளுக்கொரு தடவை மாற்றுகிறீர்கள்? அதில் எத்தனை கிருமிகள் நீங்கள் அமைதியான தூக்கத்திலிருக்கும்போது ஆர்ப்பாட்டத்தில் உள்ளது என அறிவீர்களா? பிரிட்டனில் எடுத்த ஆராய்ச்சியில் அங்கே 33 % மக்கள் வாரம் ஒருமுறை படுக்கை விரிப்பினை மாற்றுகிறார்கள்.

30 % மக்கள், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, 8 % மக்கள் 3 வாரங்களுக்கு ஒரு முறை சலவைக்கு கொடுக்கிறார்கள். 10% மக்கள் மாதம் ஒருமுறை மாற்றுகிறார்கள் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இதனால் உண்டாகும் விளைவுகள்? நீங்கள் அடிக்கடி மாற்றாமல் ஒரே படுக்கை விரிப்பில் படுத்துக் கொண்டிருந்தால் அது உங்கள் உடல் நலத்திற்கு கேடு என்பதை அறிவீர்களா? உங்கள் உடலிலுள்ள அழுக்குகள், வியர்வை, பொடுகு, எண்ணெய், கிருமிகள் எல்லாம் படுக்கை விரிப்பிற்கு இடம் மாறும்.

உங்கள் தோலிலிருந்து இறந்த செல்களும் உதிரும். இதனால் கிருமிகள் பல் மடங்கு பெருகி, படுக்கையிலேயே வசிக்கின்றன. இதிலேயே தொடர்ந்து படுக்கும்போது இரண்டு மடங்கு அழுக்கு, கிருமிகள் சேர்ந்துவிடும்.

இவை உங்கள் சருமத்தில் அலர்ஜி, தொற்று நோய்களை உருவாக்கும். மேலும் நோய்களை பரப்பும். படுக்கை விரிப்பினாலும் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகும். வாரம் ஒருமுறையாவது கட்டாயம் படுக்கை விரிப்பினை மாற்றினால் உடலில் பாதிப்பு, சரும பாதிப்பு, நோய்கள் ஆகியவற்றை தடுக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமலா?
Next post வெடிக்குமா ‘கிளஸ்டர் குண்டு’?