ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமலா?

Read Time:2 Minute, 26 Second

02-1467459130-sneezingமழைக்காலம் துவங்கிவிட்டாலே ஜலதோஷம், இருமல், மூக்கடைப்பு போன்றவை தாறுமாறாக நம்மோடு ஒட்டு உறவாடும்.

முக்கியமாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மத்தியில். இதற்காக நீங்கள் மருத்துவமனைக்கு சென்று ஐநூறு, ஆயிரம் என்று செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உங்கள் வீட்டில் இருந்தப்படியே, இந்த இயற்கை வீட்டு வைத்திய முறையை பின்பற்றினால் இந்த சின்ன சின்ன உடல்நலக் குறைபாடுகளை மிக எளிதாக சரி செய்துவிடலாம். ஜலதோசம்: ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்துக்கொள்ளவும்.

இதை, தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் சரியாகிவிடும்.

மூக்கடைப்பு: சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

சளி: முருங்கைகாயை நசுக்கி, அதனுடைய சாற்றினை எடுத்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சளி பிரச்சனை குணமாகும்.

இருமல்: தேவையான பொருட்கள்: 1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளைப்பூண்டு செய்முறை!

இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து, பிறகு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து, அத்துடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு இருவேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், ஜீரணம் போன்றவை சரியாகும். மேலும், இது உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் பயனளிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த மூன்று கேள்விக்கான பதிலை வைத்து, உங்கள் உறவில் இருப்பது காதலா? காமமா என அறியலாம்..!!
Next post உங்கள் படுக்கை விரிப்பை அடிக்கடி மாற்றாமலிருக்கிறீர்களா? இதப்படியுங்க…!!