பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் இருவரும் மீட்கப்பட்டனர்

Read Time:1 Minute, 34 Second

24-14614835பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல கஃபேவைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர்.

இரண்டு இலங்கையர்களும் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர்.

காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, தடுத்து அந்த பகுதி முழுமையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பிணையக்கைதிகளை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் பயங்கரவாதிகளால் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட 20 பணயக்கைதிகளில் 12 பேர் பங்களாதேஷ் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அதில் இரு இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன், ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி: சென்னை போலீஸ் கமிஷனர்
Next post உங்கள் திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என்பதை வெளிப்படுத்தும் 6 அறிகுறிகள்…!!