பாலித்த தெவரப்பெருமவிற்கு எதிராக ஆசிரியர்களும் பெற்றோர்களும் வீதியில் ஆர்ப்பாட்டம்

Read Time:1 Minute, 41 Second

24-14614837பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு, 10 மாணவர்களை மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பாடசாலையின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக அந்தப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையின் முன்னால் கூடிய ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிரதி அமைச்சரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புக்களை வெளியிட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

எவ்வாறாயினும் கடந்த தினங்களில் பிரதி அமைச்சர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம், குறித்த 10 மாணவர்களையும் அந்தப் பாடசாலையில் சேர்த்துக் கொண்டதன் பின்னரே நிறைவுக்கு வந்தது.

இது தவிர தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்திற்கு பிறகு ஆண்கள் தங்கள் மனைவியிடம் எதிர் பார்க்கும் 10 விஷயங்கள்…!!
Next post பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் செல்பி!