உங்கள் திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என்பதை வெளிப்படுத்தும் 6 அறிகுறிகள்…!!

Read Time:3 Minute, 53 Second

01-1464782160-3sixsignsyouareprobablygoingtogetadivorceஜோதிடம் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் பிரிந்து விடுவார்கள் என அறியலாம் என பலர் கூறுவதுண்டு. கட்டம், ராசி, பொருத்தம் என பலவன இருக்கின்றன. ஆனால், உங்கள் சுபாவம், நீங்கள் திருமணம் செய்யும் விதத்தை வைத்து கூட உங்கள் திருமணம் விவாகரத்தில் முடியும் என கண்டுபிடிக்க முடியுமாம்.

உடல்நலம் குன்றியிருக்கும் மனைவி கணவனிடம் அதிகமாக எதிர்பார்ப்பது என்ன? இதற்கு உங்கள் ராசி, கட்டம், பொருத்தம், ஜோதிடம் எல்லாம் தேவையில்லை. ஏனெனில், இவை எல்லாமே சிலபல ஆண்டுகளுக்கு முன்னர் பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள்.

எந்த வயதில், எந்த செலவில் என ஆரம்பித்து, ஒருவரின் எண்ணங்கள் கொண்டு கூட அவரது திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்….

28 – 32

28 – 32, இந்த இடைப்பட்ட வயதில் திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதிகள் தான் அதிகம் ஐந்து ஆண்டுகளுக்குள் விவாகரத்து செய்கின்றனர் என கடந்த ஆண்டு உட்டா பல்கலைக்கழகத்தில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகட்டான திருமணம்!

மிக பகட்டாக திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதிகளுக்கு மத்தியில் அதிகமாக விவாகரத்து ஆகிறது என 2014-ம் ஆண்டு எமோரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறியளவில்

பெரிதாக யாரையும் அழைக்காமல், மிக குறைந்த நபர்களை மட்டும் அழைத்து நடத்தும் திருமணங்களும் விவாகரத்தில் தான் முடிகிறது என எமோரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தமற்றவர்கள்!

செய்யும் வேலையில் சுத்தமற்றவர்கள், வீட்டை குப்பை மேடு போல வைத்துக் கொள்ளும் பழக்கம் இருப்பவர்கள் மத்தியிலான திருமணம் விவாகரத்தில் அதிகமாக முடிகிறது என கடந்த 2007-ம் ஆண்டு பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் தம்பதிகளில் 62% பேரின் இல்வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கிறதாம்.

தேனிலவு!

எமோரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், திருமணம் முடிந்து தேனிலவு செல்லும் தம்பதிகள் மத்தியில் 41% விவாகரத்து எழுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்மறை விமர்சனம்!

கடந்த 1986-ம் ஆண்டு உளவியலாளர் ஜான் காட்மேன் மற்றும் அவரது மனைவி நடத்திய ஆய்வில், நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும் தம்பதிகள் மத்தியில் விவாகரத்து ஏற்படும் அளவு 50% குறைவாக இருப்பதாகவும், எதற்கு எடுத்தாலும், எதிர்மறையாக பேசுவதும், விமர்சிப்பதும் என இருக்கும் தம்பதிகள் தான் விவாகரத்து செய்துக் கொள்ள முனைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் இருவரும் மீட்கப்பட்டனர்
Next post பலரும் அறியாத மனித உடலில் மறைந்திருக்கும் சில புதிரான இரகசியங்கள்…!!