இரு குழந்தைகளின் தந்தையோடு வீட்டை விட்டு ஓடிய தங்கையை கொலை செய்த சகோதரன்…!!
திருமணமாகி இரு குழந்தைகளின் தந்தையோடு வீட்டை விட்டு ஓடியதால் ஆத்திரமடைந்த சகோதரன் சகோதரியை வெட்டிக்கொலை செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மேல மூன்றடைப்பைச் சேர்ந்தவர் கணேசன் என்ற சிதம்பரம்(50) அரச பஸ் நடத்துனர் இவரது மனைவி சாந்தி (42). இவர்களது மகன்கள் கிருஷ்ணராஜா (25), செல்வம் (23), மகள் மாலா (22). இதில் கிருஷ்ணராஜா சென்னை வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தொழில் புரிகிறார்.
மாலா பாளையங்கோட்டை கே.டி.சி நகர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.தினமும் பஸ்ஸில் கல்லூரிக்கு சென்று வந்தார்.
ஆழ்வார் நேரியைச் சேர்ந்த சார்ல்ஸ் என்பவர் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
பஸ்ஸில் வேலைக்கு சென்ற போது சார்லஸுடன் மாலாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். அவரது கடைக்கு அடிக்கடி சென்ற மாலா ஜுஸ் குடித்து பேசிக்கொண்டிருப்பதை வழமையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து பெற்றோர் கண்டித்தனர். இதன் பின்னர் மாலா கல்லூரிக்கு செல்வதை நிறுத்தியுள்ளார்.
கடந்த இரு மாதத்திற்கு முன் மேலப்பாளையத்திலுள்ள பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற மாலா பின்னர் வீடு திரும்பவில்லை. அதே நேரத்தில் சார்ல்ஸும் தலைமறைவானார்.
இது குறித்து மாலாவின் பாட்டி மேலப்பாளையம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சார்ல்ஸின் குடும்பத்தினரும் மூன்றடைப்பு பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
பொலிஸார் இருவரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அலைந்தனர். இறுதியாக கோவை அருகே தங்கியிருந்த இருவரையும் கண்டுபிடித்தனர்.
பின்னர் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய பொலிஸார் மாலாவை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சார்ல்ஸை அவரது மனைவி அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணராஜா விடு முறையில் சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார். தனது தங்கை காதல் விவகாரம் தெரியவந்ததால் மாலாவை உறவினருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
தனக்கு திருமணம் வேண்டாம் என்று மாலா கூறியுள்ளார். தனது தங்கையை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதன் போது கிருஷ்ணராஜாவிற்கும் மாலாவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜா, வீட்டில் கிடந்த அரிவாளால் மாலாவை வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த மாலாவை நெல்லை வைத்தியசாலையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல் மாலா உயிரிழந்தார். இதுகுறித்து மூன்றடைப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணராஜாவை தேடி வருகின்றனர்.
இதனிடையே இந்த கொலை உறவினர்களின் தூண்டுதலாலேயே இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாலாவும், சார்ல்ஸும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் ஏற்கனவே திருமணமானவரை காதலித்ததால்
மாலாவுக்கு அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக உறவுக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இந்த விவகாரம் தங்களுக்கு மானப்பிரச்சினை என்றும் இதை விட்டு வைக்கக்கூடாது என்றும் கிருஷ்ணராஜாவிடம் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெறுப்படைந்த கிருஷ்ணராஜா ஒரே தங்கை என்றும் பார்க்காமல் மாலாவை வெட்டிக்கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
Average Rating