உறவில் நீங்கள் கவனமாக கையாள வேண்டிய ஆறு விஷயங்கள்…!!

Read Time:3 Minute, 34 Second

29-1467194890-1sixrelationshipchangesyouhavetomaketodayitselfஇல்லறம் என்றும் நல்லறமாக சிறக்க வேண்டும் என்றால் நீங்கள் சிலவற்றை சரியாக செய்தே ஆகவேண்டும். ஆணழகன் போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால், கட்டுடல் பேணிக்காக்க வேண்டும். அறிவுகூர்மை வேண்டும்.

படுக்கையறையில் இந்த ஆறு விஷயத்தில் கவனம் செலுத்தினால் இல்லறம் சிறக்கும்! அதே போல உங்கள் இல்லறத்தில் வெற்றிபெற வேண்டுமானால், பொறுமை, அன்பு, விட்டுக் கொடுத்து போவது, நம்பிக்கை இழக்காமல் இருப்பது என சிலவற்றை நீங்கள் பேணிக்காக்க வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியம்? தம்பதிகள் கூறும் பதில்கள்! இல்லையில்லை, நான் நானாக தான் இருப்பேன், நாமாக இருக்க மாட்டேன்.

ஆண்கள் தான் பெரியவர்கள், பெண்கள் தான் பெரியவர்கள் என மல்யுத்தம் புரிந்துக் கொண்டிருப்போம். ஆனால், எங்கள் இல்லறம் சிறக்க வேண்டும் எனில், கணவன் மனைவி இருவரும் கனவு மட்டும் தான் காண வேண்டும்.

பொறுப்பு!

தவறுகள் நடக்கும், அதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் கடமைகளை நடத்தை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் அணுகுமுறை உங்கள் மதிப்பை, துணையின் மதிப்பை குறைக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு!

மனரீதியாக, உடல் ரீதியாக நீங்கள் அவருக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். எந்த கட்டத்திலும், கொடுமையாக, வக்கிரமாக நடந்துக் கொள்ள கூடாது.

நேர்மை!

எதுவாக இருந்தாலும், செயல், பேச்சு என இரண்டிலும் நேர்மை கடைப்பிடித்தல் வேண்டும். நீங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில் அவர்களை புண்பட வைத்துவிட கூடாது.

உறுதுணை!

ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுவதுமாக புரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும். உங்கள் துணைக்க நல்ல ஊக்கமளிக்க வேண்டும். எதையும் அறியாமல், மொட்டையாக ஓர் தீர்மானம் எடுக்க கூடாது. மதிப்பளித்து பழக வேண்டும்.

ஒத்துழைப்பு!

கேளுங்கள், எதையும் எதிர்பார்க்க வேண்டாம். மாற்றங்களை ஒப்புக்கொள்ளுங்கள். ஒன்றாக முடிவெடுங்கள். விட்டுக்கொடுத்து போக பழகுங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சி மற்றும் திட்டங்கள் வெற்றியடைய உழைக்க வேண்டும்.

நம்பகம்!

ஒருவரிடம் ஒருவர் கொடுக்கும் வாக்கினை காப்பாற்ற வேண்டும். அவருக்கு ஓர் நன்மை என்றால் அதற்காக உண்மையாக பாடுபடுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருக்கலைப்பு மாத்திரைகளுடன் மூவர் கைது…!!
Next post காபியை விட க்ரீன் டீ ஏன் நல்லது ? தெரிந்து கொள்ளுங்கள்…!!