படுக்கும் முன் வெங்காயத்தை கழுத்தில் வைத்து மசாஜ் செய்தால் தைராய்டு பிரச்சனை நீங்கும் தெரியுமா?
இன்றைய காலத்தில் தைராய்டு பிரச்சனை என்பது பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் ஒன்றாக உள்ளது. அதில் கவலைக்குரிய ஓர் விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை வந்தால், அது உடல் முழுவதையும் பாதிக்கும் என்பது தான்.
கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா? இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கும் இரண்டு சுவாரஸ்யமான வைத்திய முறைகளைப் பற்றி தான்.
இந்த வைத்திய முறைகள் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால், உண்மையில் இந்த முறையால் தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்படுத்த முடியும். ஐந்தே நிமிடங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? – இந்த சைனீஸ் மசாஜ் போதும்! சரி, இப்போது தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கும் அந்த வைத்தியங்களைப் பார்ப்போமா…!
தைராய்டு பிரச்சனைக்கான காரணங்கள்
மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், சுய நோயெதிர்ப்பு குறைபாடு போன்றவற்றால் தான் ஒருவருக்கு தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகள் எழுகின்றன.
வைத்தியம் #1
இந்த வித்தியாசமான மருத்துவ முறையானது பிரபல ரஷ்ய மருத்துவரான டாக்டர் ஆல்யெக் டர்சுனோவ் என்பவரால் கண்டறியப்பட்டது.
அது என்னவெனில் பாட்டு பாடுவது. தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், குறிப்பாக குறைவான தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பைக் கொண்டவர்கள், இந்த எளிய பாட்டு பாடும் முறையைப் பின்பற்றுவதன் மூலம், இப்பிரச்சனையை சரிசெய்ய முடியும் என்கிறார் டாக்டர் ஆல்யெக்.
சந்தோஷமான மனநிலை
டாக்டர் ஆல்யெக்கின் இந்த முறை, தைராய்டு சுரப்பி மற்றும் முழு நாளமில்லா சுரப்பிகள், மனிதனின் காதல் அல்லது சந்தோஷமான உணர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை அடிப்படையாக கொண்டு கண்டறியப்பட்டது.
குதூகலமான பாட்டு
ஒருவர் நல்ல சந்தோஷமான பாடல்களை பாடும் போது, கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் அளவு குறைந்து, தைராய்டு சுரப்பியில் உள்ள கணுக்கள் அல்லது வீக்கம் மறைய ஆரம்பிக்கும்.
ஏனெனில் பாட்டு பாடும் ஒருவரது மனதில் எதிர்மறை உணர்வுகள் வெளியேற்றப்பட்டு, சந்தோஷமான உணர்வுகள் எழுவதால், இந்த தைராய்டு சுரப்பியின் செயல்பாடு சீராக்கப்படும் என்று டாக்டர் ஆல்யெக் கூறுகிறார்.
வைத்தியம் #2
இது மற்றொரு வினோதமான தைராய்டு சுரப்பி கோளாறை சரிசெய்யும் வைத்திய முறை. இந்த வைத்திய முறையையும் ரஷ்ய மருத்துவர்கள் தான் கண்டறிந்தனர்.
அதுவும் நம் வீட்டின் சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே எப்படி தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குவது என்று தான். இந்த எளிய வைத்திய முறையால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு மேம்படுத்தப்படும்.
என்ன செய்ய வேண்டும்?
இரவில் படுக்கும் முன், ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி சாறு வெளியே வரும் நிலையில், ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும். இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்யும் என்று ரஷ்ய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பு
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வைத்திய முறையைகளைப் பின்பற்றினால், தைராய்டு பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபடலாம். ஆனால் இந்த முறைகளைப் பின்பற்றும் முன், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
Average Rating