கண் பார்வையை மேம்படுத்தும் சில ஆயுர்வேத வைத்தியங்கள்…!!

Read Time:3 Minute, 54 Second

27-1467024886-1-triphala-amlaஇன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும்.

ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம். அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது நாள்பட்ட தலைவலி போன்றவை பலவீனமான கண்பார்வையின் அறிகுறிகள்.

இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஆயுர்வேதத்தின் படி, ஒருவரின் உடலில் பித்தமானது சமநிலையற்று இருந்தால், கண்பார்வை பலவீனமாகக்கூடும்.

எனவே இந்த பித்தத்தை சமநிலையாக்க ஒருசில ஆயுர்வேத வைத்தியங்கள் உள்ளன. அவற்றால் நிச்சயம் கண்பார்வையை மேம்படுத்த முடியும்.

திரிபலா 1

டேபிள் ஸ்பூன் திரிபலா பொடியை நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டி, அந்நீரால் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் அந்த நீரால் கண்களைக் கழுவி வந்தால், கண் பார்வை மேம்படும்.

நெல்லிக்காய்

தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை நீரில் கலந்து பருகி வர, கண்பார்வை பலமாகி, கண் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

கேரட்

உங்களுக்கு கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை பிரச்சனை இருப்பின், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வாருங்கள். இல்லாவிட்டால் தினமும் ஒரு கேரட்டை உட்கொண்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பாதாம்

இரவில் படுக்கும் முன் ஒரு கையளவு பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை தோலை நீக்கிவிட்டு, அரைத்து பேஸ்ட் செய்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து தினமும் பருக, கண் பார்வை மேம்படும்.

பிரிங்ராஜ்

கண் பார்வை மேம்பட வேண்டுமானல், பிரிங்ராஜ் மூலியை அரைத்து பேஸ்ட் செய்து, கண்களின் மேல் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களின் ஆரோக்கியம் மேம்படுவதைக் காணலாம்.

அதிமதுரம்

ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடியை பாலில் கலந்து, தேன் சேர்த்து பருகி வர, கண்களில் இருக்கும் அழற்சி மற்றும் வலி நீங்கி, கண்பார்வை மேம்படும்.

பூண்டு

தினம் ஒரு பூண்டு அல்லது சமைக்கும் உணவில் பூண்டை சேர்த்து வர, அதில் உள்ள உட்பொருட்கள், பலவீனமான கண் பார்வையை மேம்படுத்தி, கண் பிரச்சனைகள் அண்டாமல் தடுக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம்…!!
Next post புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-3)