மன்னாரில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த திருட்டுச் சம்பவகள் ; இளைஞர்கள் கைது…!!

Read Time:3 Minute, 17 Second

101-1மன்னார் நகரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம் பெற்று வந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களினால் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றையும் மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

மன்னார் நகரப்பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச்சம்பவம் இடம் பெற்று வந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜட்டவர மற்றும் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் எப்.எச்.எப்.எம்.பீரில் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ அவர்களின் வழி நடத்தலில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எ.எம்.பி.பி.கே.அபேய சுந்தர தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே குறித்த நபர்களை இன்று திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போது திருடப்பட்ட மோட்டார் சைக்கில் ஒன்றையும்,மடிக்கணணி ஒன்றினையும் பொலிஸார் மீட்டதோடு,திருட்டுச்சம்பவங்களுக்கு பயண்படுத்திய முச்சக்கர வண்டியினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் மன்னார் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,குறித்த இளைஞர்களினால் திருடப்பட்ட வேறு பொருட்கள் குறித்து விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எ.எம்.பி.பி.கே.அபேய சுந்தர தலைமையில் சென்ற பொலிஸ் சாஜன்களான கமகே(25405),அத்தநாயக்க(49615),பொலிஸ் கொஸ்தாபல்களான விக்கிரமசிங்க(33158),சுமித்(35802), உப்புல்(16512),ரத்நாயக்க(74157) ஸ்ராலின்(5938) மற்றும் பொலிஸ் சாரதி ஹசந்த(15464) ஆகிய குழுவினரே குறித்த இரு நபர்களை கைது செய்துள்ளதோடு,திருடப்பட்ட பெறுமதி மிக்க பொருட்களையும் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ் உரிமையாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது…!!
Next post பாலத்தின் தூணில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி; ஒருவர் காயம்…!!