சூடான காருக்குள் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து காப்பாற்ற முயன்ற தந்தை; குழந்தை இறந்தநிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்…!!

Read Time:3 Minute, 43 Second

17598fatherஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 6 மாத வய­தான மகளை வெப்பம் மிகுந்த காருக்குள் வைத்து பூட்டிவிட்டு பல மணித்­தி­யா­லங்கள் மற­தி­யாக இருந்த பின்னர், அக் ­கு­ழந்­தையை குளிர்­சா­தனப் பெட்­டிக்குள் வைத்து காப்­பாற்ற முயன்­றுள்ளார்.

மேற்­படி குழந்தை பின்னர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த நிலையில் ­கு­ழந்­தையின் தந்­தை­யான மைக்கல் தெட்போர்ட் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

33 வய­தான மைக்கல் தெட்போர்ட், அண்­மையில் ஒருநாள் காலை 9 மணி­ய­ளவில் 3 மற்றும் 5 வய­தான தனது பிள்­ளைகள் இரு­வரை காரில் ஏற்றிச் சென்று சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் இறக்­கி­விட்டார்.

வழக்­க­மாக தனது 3ஆவது பிள்­ளை­யான ஃபேர்ன் எனும் 6 மாத குழந்­தை­யையும் அவர் அப்­ ப­ரா­ம­ரிப்பு நிலை­யத்தில் விடுவார். ஆனால், அன்­றைய தினம் அக்
கு­ழந்­தைக்கு காய்ச்சல் ஏற்­பட்­டி­ருந்­ததால் அக்­ கு­ழந்­தையை சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் விடாமல் வீட்­டுக்கு அழைத்து வந்தார்.

எனினும் அக்­ கு­ழந்­தையை காரி­லி­ருந்து அவர் இறக்­க­வில்லை. அதன்பின் உறங்­கு­வ­தற்குச் சென்ற அவர், பிற்­பகல் 1 மணி­ய­ள­வி­லேயே விழித்­தெ­ழுந்து தனது மகள் காருக்குள் இருப்­பதை உணர்ந்தார்.

வெப்பம் மிகுந்த அத்­ தி­னத்தில் காருக்குள் மயங்­கிய நிலையில் அக்­ கு­ழந்தை காணப்­பட்­டது. வெப்­பத்தால் பாதிக்­கப்­பட்ட அக்­ கு­ழந்­தையை குளி­ரான நிலையில் வைத்து பாது­காக்­கலாம் எனக் கரு­திய மைக்கல் தெட்போர்ட் அக்
கு­ழந்­தையை குளிர்­சா­த­னப்­ பெட்­டிக்குள் வைத்தார்.

அதன் பின்­னர்­ அவர் 911 எனும் அமெ­ரிக்க சேவை இலக்கம் மூலம் அவசர­ சேவைப் பிரி­வி­னரை அழைத்தார். அவ­சர சேவைப் பிரி­வினர் அவ் ­வீட்­டுக்கு வந்­த­போது அக் ­கு­ழந்தை இறந்­து­கி­டந்­தது.

இச்­ சம்­ப­வத்­தை­ய­டுத்து மைக்கல் தெட்­போர்ட்டை பொலிஸார் கைது செய்­தனர். அவர் மீது கைமோசக் கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. தற்­போது அவர் 20,000 டொலர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

மைக்கல் தெட்போர்ட் தற்­போது வேலை­யில்­லாமல் இருப்­பவர். அவர் முன்னர் ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றினார். கடந்த வருடம் பாட­சா­லையில் அவர் பௌதி­க­வியல், இர­சா­ய­ன­வியல் ஆகி­ய­வற்றை கற்­பித்தார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மைக்கல் தெட்­போர்ட்டின் தந்தை மேற்படி சம்பவம் தொடர்பாக கூறுகையில், எனது மகன் ஓர் அன்பான தந்தையாக விளங்கியவர். இச் சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பதை என்னால் நம்ப முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாடலிங் என்ற பெயரால் இளம் பெண்களை நிர்வாணப் படம் எடுத்து, விபசாரத்தில் தள்ளிய பெண் கைது..!!
Next post திருகோணமலை பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை – பெற்றோர் உண்ணாவிரதம்…!!