வாட்ஸ்அப்பில் ஆபாசபடம் வெளியிடப்போவதாக மாணவிக்கு மிரட்டல்: என்ஜினீயர் கைது…!!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி விளாந் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட்ராஜ் (வயது 55). மும்பையில் பில்டிங் சூப்பர்வைசராக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மகள் சுமதி (21), (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
சின்னசேலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.இ. படித்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கரடிபுத்தூர் பகு தியை சேர்ந்தவர் மதியழகன் (23). பி.இ. படித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வரு கிறார்.
மதியழகனும்– சுமதி யும் பேஸ்புக் மூலம் நண்ப ரானார்கள். பின்னர் செல்போனில் இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமதிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது இருவரும் வெளியில் சந்தித்துக் கொண்டனர். அப்போது மதியழகனுடன் சுமதி செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அவர்கள் நண்பர்களாகவே பழகி வந்தனர். ஆனால், மதியழகன் தவறான கண் ணோட்டத்துடனேயே சுமதி யிடம் பழகி வந்தார்.
இந்த நிலையில் என்னு டன் நீ எடுத்துக் கொண்ட படத்தை வாட்ஸ்அப்பில் வெளியிடுவேன் என்று சுமதியை மதியழகன் திடீரென்று மிரட்டினார். 50 ஆயிரம் ரூபாய் தந்தால் படத்தை வெளியிட மாட்டேன் என்று கூறினார்.
இதனால் சுமதி பயந்துபோய் மதியழகனுக்கு 40 ஆயிரம் ரூபாய் கொடுத் தார். 2 நாட்கள் கழித்து சுமதியிடம் மதி யழகன் செல்போனில் பேசினார். என்னுடன் 2 நாட்கள் உல்லாசமாக இரு, இல்லாவிட்டால் உன் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப்பில் வெளியிடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டினார்.
இதனால் சுமதி அதிர்ச்சி அடைந்து தனது தந்தையிடம் இந்த சம்பவத்தை செல்போனில் கூறி கதறி அழுதார். அவர் மும்பையில் இருந்து உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு வந்தார்.
வின்சென்ட்ராஜும், அவ ரது மனைவி அன்னை மேரியும் கள்ளக்குறிச்சி யில் வைத்து மதியழகனை சந்தித்தனர். அப்போது ஏன் என் மகளை இவ் வாறு மிரட்டுகிறாய்? என்று வின்சென்ட்ராஜ் மதியழகனை கேட்டு கண் டித்தார்.
அதற்கு மதியழகன், உங்களது மகளை 2 நாட் கள் என்னுடன் தங்க சொல்லுங்கள். அதன் பிறகு நான் எந்த படங்களையும் வாட்ஸ்அப்பில் வெளியிட மாட்டேன் என்றார்.
உடனே ஆவேசமடைந்த வின்சென்ட்ராஜ், மதியழ கனை தாக்க முயன்றார். மதியழகன் கோபம் அடைந்து வின்சென்ட்ராஜை கீழே தள்ளி விட்டார். மேலும் நான் சொல்வதை நிறை வேற்றாவிட்டால் உங்கள் மகள் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப்பில் வெளியிடுவேன். உங்கள் குடும் பத்தையே கொலை செய்து விடுவேன் என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது குறித்து கள்ளக் குறிச்சி போலீசில் வின் சென்ட்ராஜ் புகார் செய் தார். சப்–இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து மதியழகனை போலீசார் கைது செய்தனர்.
மதியழகன் மேலும் ஒரு பெண்ணையும் இதேபோல் மிரட்டி இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள் ளது. * * * கைது செய்யப்பட்ட மதியழகன்
Average Rating