கிளிநொச்சியில் தனியார் பேருந்துக்கள் சேவை புறக்கணிப்பில் பயணிகள் அவதி…!!

Read Time:2 Minute, 3 Second

13-12தனியார் போக்குவரத்துச்சேவைகள் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ள நிலையில் கிளிநொச்சியில் தனியார் பேரூந்து எவையும் சேவையில் ஈடுபடுத்தபடாமையினால் அரச உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள் , மக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

தனியார் பேரூந்திற்கு 60 வீதமும், இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பேரூந்திற்கு 40 வீதமும் என்ற விகிதாசாரத்தில் கடந்த 3 வருட கால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது.

எனினும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை இதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருவதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தவிடயம், தொடர்பில் மத்திய அரசுடனும், மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் குற்றம்சுமத்தப்பட்டள்ளது.

இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற்கொண்டு இன்று திங்கட்கிழமை முதல் தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்தள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்…!!
Next post சுற்றுப்புற மாசினால் பக்கவாதம் அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்…!!