அமெரிக்காவில் வெள்ளத்துக்கு 24 பேர் பலி: விர்ஜீனியா பேரழிவு பகுதி ஆக பிரகடனம்- அதிபர் ஒபாமா உத்தரவு…!!

Read Time:1 Minute, 44 Second

201606261254158761_24-killed-in-floods-in-the-United-States-Virginia-as-part-of_SECVPFஅமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு ஆக காட்சி அளிக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் 24 பேர் பலியாகி உள்ளனர்.

ஏராளமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன. வெள்ளம் காரணமாக பல நகரங்கள் தகவல் தொடர்பு இன்றியும் போக்குவரத்து இன்றியும் துண்டிக்கப்பட்டுள்ளன.

வெள்ள சேதம் குறித்த அறிக்கையை மேற்கு விர்ஜீனியா மாகாண கவர்னர் இயர்ல் ரே தாம்பிலின், அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைத்தார்.

அதன் அடிப்படையில் மேற்கு விர்ஜீனியாவை பேரழிவு பகுதி ஆக அதிபர் ஒபாமா பிரகடனம் செய்து அறிவித்தார். அதைத் தொடர்ந்து அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் பஸ் வெடித்த விபத்தில் 30 பேர் உடல் கருகி பலி…!!
Next post சிவகாசியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை…!!