56 பேருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு…!!

Read Time:2 Minute, 11 Second

53-6வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்தத்தினால் கிழக்குப் பிராந்தியத்தில் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

சேலம் மற்றும் பாண்டிச்சேரி றோட்டறிக் கழகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு ஹெரிட்ரேச் றோட்டறிக்கழகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதன் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான றோட்டறியன் எஸ். கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயவாளர் பிரிவுகளையும் சேர்ந்த 56 பேருக்கு தலா ரூபாய் 50000 முதல் ரூபாய் 150000 வரை பெறுமதியான செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன.

இரு கால்களையும் இழந்தவருக்கு பொருத்தப்பட்ட செயற்கைக் கால்களின் செயற்பாடுகள் மற்றும் உணர்வுகளை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் மற்றும் சேலம் ஹோப் றோட்டறிக் கழகத்தின் தலைவர் றோட்டறியன் எஸ். சிவகுமார் ஆகியோர் பரிசோதித்தனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஹெரிட்ரேச் றோட்டறிக்கழகத்தின் செயலாளர் எஸ். ஜெகநாதன் பொருளாளர் ஏ.ஏ. அருணசாந்த முட்டக்களப்பு றோட்டறிக் கழக முன்னாள் தலைவர் றோட்டறியன் எஸ்.ரி. ஒகஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களில் 565 செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை கொன்று தற்கொலைக்கு முற்பட்ட நபர்..!!
Next post கொழும்புக்கு வேலைக்கு சென்ற 17 வயது சிறுவன் பிணமாக வீடு திரும்பிய நிலை ; மக்கள் மத்தியில் பீதி…!!