ஆங்கில பாடலுக்கு பரதநாட்டியம்… வைரல் வீடியோ..!!
தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக்கலையான பரதநாட்டியத்தை ஆங்கிலப் பாடலுக்கு ஆடினால் எப்படி இருக்கும் ? அப்படி பரதநாட்டிய வீடியோ ஒன்று யூடியுபில் கலக்கி வருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகியான எல்லி கோல்டிங்கின் மனதை வருடும் ஆங்கில பாடலான ‘லவ் மீ லைக் யு டு ‘ என்ற பாடலின் பின்னணியில் நமது பாரம்பரிய நடன கலையான பரதநாட்டியம் ஆடப்படுவதை யுடியுபில் எண்ணற்றோர் கண்டு ரசித்து வருகின்றனர்.
பெங்களூரை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பிரியா வருணேஷ் குமார், பிரமிதா முகர்ஜி, மற்றும் சந்தியா முரளிதரன் ஆகிய மூவரால், இரண்டு நிமிடம் ஓடுமளவில் உருவாக்கப்பட்டுள்ள, இந்த வீடியோ கடந்த நவம்பர் 2015 இல் யூடியுபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மிகக்குறைந்த காலத்திலேயே இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதுடன், பல சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதுகுறித்து, பியாஹ் நடன கம்பெனியின் நிறுவனரான பிரியா வருணேஷ் குமார், இந்த வீடியோ பெங்களூரை அடுத்த மார்த்தஹள்ளியில் ஒரு கட்டிடத்தின் வாயிலில் வைத்து எடுத்ததாக நியுஸ் மினிட்டிடம் கூறினார்.
’50 ஷேட்ஸ் ஆப் கிரே ‘ என்ற சினிமாவில் எல்லி கோல்டிங்சின் இந்த பின்னணி பாடலுக்கான காட்சியை தான் பரதநாட்டியம் ஆடும் திட்டமிடுவதற்கு முன் பார்த்ததில்லை என கூறுகிறார் பிரியா.
இருப்பினும், இவர்களின் இத்தகைய முயற்சிக்கு, பழமையை விரும்பும் பரதநாட்டிய கலைஞர்களிடமிருந்து விமர்சனம் வந்துவிடுமோ என பயந்ததாக கூறுகிறார் இவர்.
ஆனால், இந்த வீடியோ வெளியான பின், பிரியாவிற்கும் அவரது சக தோழிகளுக்கும் நாட்டிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே கிடைத்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating