மணப்பெண் உடையில் வந்து மாணவனிடம் காதலை தெரிவித்த ஆசிரியை…!! Photo
பல்கலைக்கழக ஆசிரியையொருவர், மணப் பெண் ஆடை அணிந்தவாறு நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அந்தப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரிடம் அவரைத் திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை வெளியிட்டு அவைரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் சீனாவில் ஹுனான் மாகாணத்தில் இடம் பெற்றுள்ளது.
சங்டி நகரிலுள்ள ஹுனான் கலை மற்றும் விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக கடமையாற்றும் ஹு என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் குறிப்பிட்ட ஆசிரியை அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்து மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கும் வகையில் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றிருந்த அவர், 4 மாதங்களுக்கு முன் பல்கலைக்கழக வகுப்பொன்றில் தன்னை விடவும் 10 வயது இளமையான பெயர் வெளியிடப்படாத குறிப்பிட்ட மாணவரை முதன் முதலாக சந்தித்தார்.
முதல் சந்திப்பிலேயே அந்த மாணவர் பால் ஈர்க்கப்பட்ட ஹு, அவரிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை புதுமையான வழிமுறையைக் கையாண்டு வெளியிடத் திட்டமிட்டார்.
அவர் அந்தப் பல்கலைக்கழக மாணவர்களை மணப்பெண் தோழிகள் மற்றும் மணமகன் தோழர்கள் போன்று ஆடை அணிந்து வரச் செய்து அவர்கள் மத்தியில் திருமண ஆடையும் முகமூடியும் அணிந்தவாறு தோன்றி தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை மாணவரிடம் அவர் வெளியிட்டார். இன்ப அதிர்ச்சிக்குள்ளான அந்த மாணவர் உடனே ஹுவின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பில் மேற்படி மாணவர் விபரிக்கையில், தன்னை விடவும் ஹு 10 வயதால் மூத்தவர் என்பதை தான் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என தெரிவித்துள்ளார்.
இன்னும் சில வாரங்களில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறவுள்ள அவர், தொழில் ஒன்றைப் பெறுவதற்கு தற்போது முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அதன் பின் ஹுவை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார். அவரது திருமணத்திற்கு அவரது பெற்றோர் ஆதரவளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating