ஏன் தினமும் இரவில் படுக்கும் முன் பாத மசாஜ் செய்வது நல்லது என சொல்கிறார்கள் தெரியுமா?

Read Time:2 Minute, 21 Second

foot-massage-20-1466416168மிகவும் பயனுள்ள ஓர் மருத்துவ சிகிச்சையில் ஒன்று தான் மசாஜ் தெரபி. ஏனெனில் உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுக்கும் போது, டென்சன் குறைவதோடு, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் அடைகிறது. மசாஜ் தெரபியில் ஒரு பகுதி தான் ரிப்ளக்ஸாலஜி என்னும் பாத அழுத்த முறை.

ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

பாதங்களில் ஒருவர் தினமும் மசாஜ் செய்து வந்தால், அதனால் மன அழுத்தம் குறையும், உடல் ரிலாக்ஸ் அடையும், பாலியல் ஆசை அதிகரிக்கும், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்படும், தூக்க பிரச்சனைகள் தடுக்கப்படும், செரிமான பிரச்சனைகள் விலகும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும்.

முக்கியமாக கர்ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைத் தடுக்க முடியும். உதாரணமாக, காலின் பெருவிரலோடு மூளை மற்றும் நுரையீரல் நேரவு தொடர்வு கொண்டுள்ளது.

எனவே பெருவிரலில் மசாஜ் செய்தால் மூளை மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். காலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தம் பல் வலிக்கு உடனடி நிவாரணம் தரும். கடைசி சிறு விரல் காது வலியைக் குறைக்கும்.

ஆகவே தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது நேரம் பாதங்களை மசாஜ் செய்து விட்டு உறங்குங்கள். இதனால் உங்களுக்கு தெரியாமலேயே பல நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முப்பது வயதை நெருங்கும் போது, உங்களால் தவிர்க்க முடியாத 7 விஷயங்கள்…!!
Next post 2 நாட்களில் தலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் 3 அதிசயப்பொருட்கள்..!!