மெக்சிகோவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் வன்முறை: போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலி…!!

Read Time:2 Minute, 15 Second

201606200926065104_Three-dead-45-injured-as-teachers-union-clashes-with-police_SECVPFமெக்சிகோ நாட்டில் சட்டவிரோதமான ஒரு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாக ருபென் நுனெஸ் என்ற ஆசிரியரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அந்நாட்டின் பிரதான ஆசிரியர் சங்க தலைவரான அவரை விடுவிக்ககோரி ஆசிரியர் சங்கத்தை ஏராளமானோர் ஓக்சாக்கா மாநிலத்தில் சாலை மறியில் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து சில நாட்களாக நீடித்துவரும் இந்த சாலை மறியலால் மெக்சிகோ அரசுக்கு சொந்தமான பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லும் கச்சா எண்ணெயை எடுத்துச் செல்ல இயலாத நிலை நீடித்தது. இதனால், பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையை இழுத்து மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதைத் தவிர்க்க, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 120 டேங்கர் லாரிகளில் கச்சா எண்ணெய் அனுப்பி வைக்க அதிகாரிகள் தீர்மானித்தனர். அந்த லாரிகள் நோசிக்ஸ்ட்லான் சாலை வழியாக இன்று வந்தபோது மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கற்கள் மற்றும் தடிகளால் லாரிகளின்மீது தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்புக்கு உடன்வந்த போலீசார் போராட்டக்காரர்கள்மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்களில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. போலீஸ் தரப்பிலும் 20 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரலாற்று சிறப்புமிக்க ரோம் நகரின் முதல் பெண் மேயராக விர்ஜினியா ராகி தேர்வு…!!
Next post கருவில் இருக்கும் குழந்தை பற்றிய பாலின சோதனை: 6 பேர் கைது…!!