வரலாற்று சிறப்புமிக்க ரோம் நகரின் முதல் பெண் மேயராக விர்ஜினியா ராகி தேர்வு…!!

Read Time:1 Minute, 51 Second

201606200914385526_Rome-has-elected-populist-Virginia-Raggi-as-its-first-female_SECVPFஇத்தாலி நாட்டில் குடியரசு கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் செயலாளராக பொறுப்புவகிக்கும் மட்டியோ ரென்ஸி இத்தாலியின் பிரதமராக உள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் தலைநகரான ரோம் நகரின் உள்ளாட்சி நிர்வாகத்துக்கான மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி வேட்பாளரான ராபர்ட்ரோ கியாச்செட்டி போட்டியிட்டார். அவரை எதிர்த்து இத்தாலி திரையுலகின் பிரபல காமெடி நடிகரால் கடந்த 2009-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இயக்கமான பைவ் ஸ்டார் கட்சியின் வேட்பாளராக பிரபல பெண் வழக்கறிஞர் விர்ஜினியா ராகி போட்டியிட்டார்.

இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ரோம் நகரின் முதல் பெண் மேயராக விர்ஜினியா ராகி (37) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரோம் நகர மாநகராட்சி நிர்வாகத்தால் வெகுகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ஆளும்கட்சி மீது ஆத்திரத்தில் இருந்த ரோம் நகரவாசிகள் ஆளும்கட்சிக்கு எச்சரிக்கையாக இந்த தேர்தல் முடிவை அளித்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓமன் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற பெண் சி்த்ரவதை: மீட்கக் கோரி மகள் புகார்- வீடியோ…!!
Next post மெக்சிகோவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் வன்முறை: போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலி…!!