இளம்பெண் கொலை: அமெரிக்க கடற்படை தளத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் ஆர்ப்பாட்டம்…!!

Read Time:3 Minute, 9 Second

201606191226028881_Thousands-protest-US-bases-on-Okinawa-after-Japan-womans_SECVPFஜப்பானின் ஒக்கினாவா மாவட்டத்தில் அமெரிக்க கடற்படை தளத்தில் பணியாற்றி வருபவர் இளம்பெண்ணை கற்பழித்து கொன்றுவிட்டதாக எழுந்த வதந்தியை தொடர்ந்து அங்குள்ள அமெரிக்க கடற்படை தளத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜப்பான் நாட்டில் உள்ள ஓகினாவா தீவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கடேனா என்ற கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வீரர்கள் உள்பட அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் என சுமார் 35 ஆயிரம் அமெரிக்கர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இதுதவிர மேலும் 15 ஆயிரம் அமெரிக்கர்கள் இங்குள்ளனர்.

இந்த தளத்தில் பணியாற்றும் அமெரிக்க படையினரில் சிலரால் ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த கடற்படை தளத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என ஓகினாவா கவர்னர் மற்றும் அங்கு வசித்துவரும் பெரும்பாலான மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அமெரிக்க கடற்படை வீரர்களில் ஒருவரான ஐமி மேஜியா(21) என்பவர் நேற்று சாலை விதிகளை மீறியவகையில் எதிர்திசையில் தனது காரை வேகமாக ஓட்டிச்சென்று அவ்வழியாக வந்த இன்னொரு காரின்மீது நேருக்குநேராக மோதினார். இதில் எதிரேவந்த காரில் இருந்த இருவர் காயமடைந்தனர்.

இந்த விபத்தின்போது ஐமி மேஜியா குடிபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டிய ஓகினாவா போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், ஓகினாவா தீவில் உள்ள கடேனா கடற்படை தளத்தில் முகாமிட்டுள்ள 18,600 கடற்படை வீரர்கள் இனி மது அருந்த கூடாது என ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படை தலைமையகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க கடற்படை வீரரால் உள்ளூரை சேர்ந்த 20 வயது பெண்ணான கென்னெத் ஷின்ஸாட்டோ அமெரிக்க கடற்படையில் வேலைசெய்யும் பணியாளர் கற்பழித்து கொன்றதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து, கடேனா கடற்படை தளத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1500 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை தாக்க தயாராகும் வேற்று கிரகவாசிகள்…!!
Next post அமெரிக்காவில் பேட்டரியில் பறக்கும் விமானம்: விரைவில் சோதனை ஓட்டம்…!!