அமெரிக்காவில் மலைசிங்கத்துடன் சண்டையிட்டு 5 வயது மகனை காப்பாற்றிய தாய்…!!

Read Time:2 Minute, 18 Second

201606191415536423_Mother-Saves-5-Year-Old-Son-From-Mountain-Lion-Attack_SECVPFஅமெரிக்காவில் கொலொ ரோடா மாகாணத்தில் ஆஸ்பென் அருகே பிட்கின் பகுதி உள்ளது. இது மலைப் பகுதியை ஒட்டியுள்ளது. எனவே அங்கு வாழும் வன விலங்குகள் ஊருக்குள் வந்து விடுவது வழக்கம்.

இந்த நிலையில் வீட்டின் முன்பு 5 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவன் கூக்குரலிட்டு அலறினான். அதைக் கேட்ட அவனது தாய் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்.

அங்கு கண்ட காட்சி அவரை பதற வைத்தது. ஒரு பெரிய மலைச்சிங்கம் ஒன்று தனது மகனை அடித்து தாக்கி கொண்டிருந்தது. அதை பார்த்த அவருக்கு தாய்ப்பாசம் வெறியாக மாறியது.

உடனே மலை சிங்கத்தின் மீது பாய்ந்து ஆயுதம் எதுவுமின்றி தன்னை அறியாமல் கையால் தாக்கினார். அவரது தாக்குதலை சமாளிக்க முடியாத மலைசிங்கம் வந்த வழியே ஓட்டம் பிடித்தது.

எனவே 5 வயது சிறுவன் உயிர் தப்பினான். ஆனால் அவனது தலை, கழுத்து, முகம் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவன் டென்வார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். சிங்கம் தாக்கியதில் சிறுவனின் தாய்க்கும் கைகள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டன.

தகவல் அறிந்ததும் பிட்கின் நகர ஷெரீப் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க வனத்துறையினர் விரைந்து வந்து மலைச்சிங்கத்தை தேடி வருகின்றனர். ஏனெனில் அச்சிங்கம் அங்கேயே மறைந்துள்ளது.

இதற்கிடையே கொலா ரோடா மிருக காட்சி சாலையில் இருந்து அது தப்பியதா என்றும் சோதனை நடந்து வருகிறது. இப்பகுதியில் கடந்த 1991-ம் ஆண்டிலிருந்து இதுவரை 3 தடவை மலைச்சிங்கங்கள் தாக்கியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் பலி..!!
Next post பாம்பை கையால் பிடித்து பெற்றோரையும், மற்றோரையும் மிரள வைத்த சிறுமி…!! வீடியோ