யாழ் பொது நூலகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை..!!

Read Time:2 Minute, 20 Second

timthumbஇந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தையுமாகிய மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து அப்துல் காலமின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து வைத்தனர். இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த அழகிய திருவுருவச் சிலை யாழ் பொது நூலகத்திலுள்ள இந்திய கோணர் வளாத்தில் நிறுவப்பபட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு அப்துல் கலாம் வருகை தந்திருந்த போது அவரைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்திலும் மாணவர், மக்களின் ஆதரவு நிலைத்திருப்பதை இவ்வுலகம் அறிந்திருந்தது. அப்துல் கலாமின் கருத்தை ஏற்கும் யாழ்ப்பாண மாணவர்கள் அவரைப் போன்று வரவேண்டும் என்ற ஒரு ஊந்துதலுக்கான அடித்தளமாக இந்ந சிலை யாழ் பொது நூலகத்தில் நிறுவப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, யாழ் மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ந.சண்முகலிங்கன், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதர்கள் தொடங்கி நாய் வரை நடாத்தப்படும் சிசேரியன்..!!(அதிர்ச்சிப் படங்கள்)
Next post ராஜஸ்தானில்ஏ .டி.எம். காவலாளி அடித்துக் கொல்லப்படும் காட்சி..!!(வீடியோ )