ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனியுடன் டிரா செய்தது போலந்து..!!
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஜெர்மனி-போலந்து இடையேயான ஆட்ட முடிவில் கோல் எதுவும் விழாததால் டிரா ஆனது.
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள ஜெர்மனி-போலந்து அணிகள் மோதின.
உலக சாம்பியனான ஜெர்மனி அணி போலந்தை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் போலந்து வீரர்கள் ஜெர்மனிக்கு ஈடுகொடுத்து விளையாடினார்கள். ஜெர்மனியின் கோல் வாய்ப்புகளை பலமுறை முறியடித்தனர்.
55-வது நிமிடத்தில் போலந்து அணிக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி வீரர் மிலீக் அதை தவறவிட்டார். கோல் அடிக்க முயற்சி செய்த ஜெர்மனி அணிக்கு கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்டம் முடிவில் கோல் எதுவும் விழாமல் இந்த ஆட்டம் டிரா ஆனது.
போலந்து அணிக்கு எதிராக வெற்றி பெற முடியாததால் ஜெர்மனி வீரர்கள் சோகத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார்கள். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் உக்ரைன் அணியை வீழ்த்தி இருந்தது.
முன்னதாக இதே பிரிவில் நேற்று நள்ளிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்து-உக்ரைன் அணிகள் மோதின. இதில் உக்ரைன் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 49-வது நிமிடத்தில் வடக்கு அயர்லாந்து வீரர் மெக்யூலே கோல் அடித்தார். பின்னர் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் வடக்கு அயர்லாந்து 2-வது கோலை போட்டது.
இந்த கோலை மெக்ஜின் அடித்தார். முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்து வென்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
முதல் ஆட்டத்தில் போலந்து அணியிடம் தோற்று இருந்தது. உக்ரைன் பெற்ற 2-வது தோல்வி இதுவாகும். இதனால் அந்த அணிக்கு சுற்று வாய்ப்பு கிட்டுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஜெர்மனி, போலந்து அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி உள்ளது
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating