மாணவர்களோடு மாணவராக பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்கும் (68) வயது முதியவர் – நேபாளத்தில் விநோதம்..!!

Read Time:3 Minute, 33 Second

durgakamiwalksoutsidetheschoolinsyangja15062016-big (1)நேபாள நாட்டில் 68 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதன்மூலம், அந்நாட்டின் வயதான மாணவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். கல்வி கற்க வயது தடையில்லை என்பதை செயலில் நிரூபித்துள்ளார் இந்த முதியவர்…

நேபாளத்தின் பெடி கோலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் துர்கா கமி. 68 வயதான அவர், தனது பேரக்குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய வயதில், அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவராக திகழ்ந்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவரால், சூழ்நிலை காரணமாக இளமை காலத்தில் தனது கல்வியைத் தொடர முடியாமல் போனது. அவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு காலமானதைத் தொடர்ந்து, 6 பிள்ளைகளும் வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டதால், தனிமையில் வாழும் நிலைக்கு துர்கா கமி தள்ளப்பட்டார்.

மலைகள் சூழ்ந்த அழகிய கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கும் அவர், சிறு வயதில் கைவிட்ட கல்வியை மீண்டும் தொடர விரும்பியபோது அங்குள்ள பள்ளி ஆசிரியர்களும் அதற்கு ஒத்துழைத்தனர். இதனால், தற்போது அங்குள்ள கலா பைரப் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களில் இவரும் ஒருவராக மாறியுள்ளார். ஆசிரியர் ஆகவேண்டும் என்ற தனது சிறுவயது கனவு நிறைவேறாமல் போனாலும், தான் இறப்பதற்குள் படித்தவன் என்ற சிறப்பை பெற்றுவிடவேண்டும் என்ற ஆர்வம் காரணமாகவே இந்த வயதிலும் பள்ளிக்குச் செல்வதாக துர்கா கமி பெருமிதத்துடன் கூறுகிறார்.

துர்கா கமியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே, படிப்புக்கு தேவையான சீருடை உட்பட அனைத்து பொருட்களையும் வழங்கி துர்கா கமிக்கு உதவியுள்ளார். தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக சிறுவயதில் துர்கா கமிக்கு பள்ளியில் கசப்பான பல அனுபவங்கள் கிடைத்தபோதிலும், தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி, சக மாணவர்கள் அனைவரும் இவருடன் மிகுந்த அன்போடு பழகுகின்றனர். அதுமட்டுமின்றி, அவரை அப்பா என்று பாசத்தோடு அழைத்து மாணவர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். கல்வி கற்க வயது தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் துர்கா கமி, ஒரு முதியவரே ஆனலும், துணிச்சல் மிக்க இந்த முயற்சியால் அவர் ஒரு இளம் மாணவராகவே ஜொலிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சபரிமலை கோவிலுக்கு ஆண் வேடமிட்டு சென்ற (18) வயது தமிழக பெண்..!!
Next post குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க..!!