2 சூரியன்களுடன் வியாழன் போன்று புதிய கிரகம்: நாசா மையம் கண்டுபிடிப்பு…!!

Read Time:1 Minute, 58 Second

201606151044169900_NASA-Kepler-discovers-a-planet-with-two-suns_SECVPF2 சூரியன்களுடன் வியாழன் போன்ற புதிய கிரகத்தை ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது.

விண்வெளியில் உள்ள நட்சத்திர கூட்டம் மற்றும் புதிய கிரகங்களை கண்டுபிடிக்க அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை வானில் செலுத்தியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்புகிறது.

தற்போது புதிய கிரகத்தை கெப்லர் டெலஸ் கோப் கண்டுபிடித்துள்ளது. அதற்கு கெப்லர் 1647 பி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கிரகம் தற்போதுள்ள வியாழன் போன்று உள்ளது. இதன் அருகே 2 நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரியன் போன்ற தோற்றத்தில் உள்ளது. அதில் ஒரு சூரியன் பூமியில் இருப்பதைவிட பெரிய அளவிலும், மற்றொன்று சிறியதாகவும் உள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.

அதே நேரத்தில் இது கியாஸ் நிரம்பிய கிரகம். எனவே இது வாழ தகுதியற்றது என்றும் கூறப்படுகிறது. மேலும் இங்கு பெரிய சந்திரன்கள் இருந்தால் வாழத் தகுதியான கிரகமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் கழிவகற்ற 80 இலட்சம் ரூபா…!!
Next post பாரீஸ் புற நகரில் போலீஸ் அதிகாரி, மனைவி குத்திக்கொலை: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு…!!