வலியைப் போக்கும் ஆயுர்வேதத்தைப் பற்றி சில தகவல்கள்…!!
வலி என்பது உடலின் எந்த பாகத்திலும் ஏற்படும். உள்ளுறுப்புகளின் பாதிப்பால் வெளிப்புறத்தில் தெரிவதுதான் வலி. தலைவலியில் தொடங்கி,வயிற்று வலி, நெஞ்சு வலி, கழுத்துவலி என எத்தனையோ வலிகள் வரலாம்.
நோயை அல்லது என்ன கோளாறு என்று கண்டுபிடித்து சரி செய்தாலும், அப்போது வரும் வலியை தாங்க முடியாத அளவிற்கு துன்பத்தை சில சமயங்களில் தரும்.
அதனை தவிர்க்க வலிகுறைப்பு மாத்திரைகளை சாப்பிடுவது அதிக பக்கவிளைவுகளைத் தரும் என்பது முற்றிலும் உண்மை. அப்படியான சமயத்தில் ஆயுர்வேதத்தில் வலிகளை குறைக்க நிறைய மருந்துகள் உள்ளன.
அவற்றில் மற்ற ரசாயன மூலக்கூறுகள் கலந்த மாத்திரைகளை விட பக்க விளைவுகள் மிக மிகக் குறைவானது. ஆயுர்வேதம் நம் உடல் அமைப்பினை 5 மூலக்கூறுகளாக பிரித்துள்ளது. இந்த 5 கூறுகளும் கலந்த அமைப்பை 3 தோஷங்களாக ஏற்படுத்தியுள்ளார்கள். அவைதான் “வாயு” பித்தம்” “கபம்”.
இந்த மூன்று தோஷங்களில் வாயு தோஷம்தான் வலியை ஏற்படுத்தக் கூடியவை. வலிகளை எவ்வாறு ஆயுர்வேதம் வகைப் படுத்தியுள்ளார்கள் என பார்ப்போம். உடல் முழுவதும் ஏற்படக் கொடிய பொதுவான வலி- வியான வாயு தலை வலி- ப்ராண வாயு மற்றும் வியான வாயு வயிற்று வலி- ஸமன் வாயு மற்றும் அபன் வாயு நெஞ்சு வலி – வியான வாயு மற்றும் ப்ராண வாயு இந்த மாதிரி வலி ஏற்படும் சமயங்களில் மூலிகை சிகிச்சை, சரியான உணவுக் கட்டுப்பாடு, நச்சுக்களை வெளியேற்றுதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், உடற்பயிற்சி ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
வலியை குறைக்கும் மூலிகைகள் :
தலைவலி – தலைவலியை குறைக்க ஆயுர்வேதத்தில் பெரும்பாலும் ஜடமாம்ஸி, ப்ராமி, ஹரிடாகி, போன்ற மருந்துகளை உபயோகிப்பார்கள். வாய்வு மற்றும் சிறுகுடல் பிரச்சனைகளுக்கு பெருங்காயம், லவங்கம், யுவானி போன்ற மூலிகை மருந்துகளை உபயோகிக்கப்படுகிறது.
மூட்டு வாதம் மற்றும் முடக்கு வாதத்திற்கு குக்குலு, தாஷாமுலா போன்றவை உபயோகபப்டுத்தப்படுகிறது. நச்சுக்களை நீக்க :
ஆயுர்வேத மூலிகை எண்ணெய் மூலம் உடலுக்கு மசாஜ் செய்யும்போது, அவை சருமத்திற்குள் சென்று, நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் தசை மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலிகளை போக்குகிறது.
உணவுக் கட்டுப்பாடு :
நாம் உண்ணும் உணவும் நோயை குணப்படுத்தும் ஆற்றல் தரும். வலையை போக்கும். ஆகவே தீவிர உணவுக் கட்டுப்பாட்டினை ஆயுர்வேதம் பரிந்துரைக்கும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய கீரை காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
நோய் அல்லது வலியைப் பொறுத்து குளிர்ச்சியான அல்லது சூட்டை ஏற்படுத்தக் கூடிய பழங்களையும் காய்களையும் உண்ண வெண்டும் என்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்த வேண்டும் : உண்ணும் உணவு சரியாக ஜீரணம் ஆகவில்லையென்றால், அவை உடலில் நச்சுக்களை உண்டாக்கி அதன் மூலம் பிரச்சனைகளை தரும். உதாரணத்திற்கு வயிற்று வலியை சொல்லலாம். ஆகவே சுத்தமான தரமான எண்ணெய் உபயோகப்படுத்த வேண்டும்.
குறைந்த காரம், மசால குறைவான உணவுகள் ஆகியவற்றை சாப்பிட அறிவுறுத்துகிறது. நரம்பு மண்டலத்தை சமன்படுத்துதல் :
முறையான யோகா, சுவாசப் பயிற்சி, உடல் உழைப்பு ஆகியவை நரம்புகளை புத்துணர்வோடு இருக்கச் செய்யும். நரம்புகள் இறுக்கமில்லாமல் இருக்கும்படி இருந்தாலே வலிகள் உடலில் ஏற்படாது.
மன அழுத்ததை சமாளித்தல் :
மன அழுத்தம் நரம்புகளையும் , ரத்தக் குழாய்களையும் பலவீனப்படுத்துகிறது. ஆகவே மன அழுத்தம் இல்லாத வகையில் அல்லது குறைக்கும் வகையில் வாழ்க்கையை சமன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கைமுறை :
எந்த பிரச்சனையும் ஒரே நாளில் உங்களுக்குள் புகுவதில்லை. திடீரென் ஒரு நோய் தாக்குவதில்லை. எப்போதும் நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை எற்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.
ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம், தீய பழக்கங்கள் இல்லாமல் இருப்பது என இருந்தால் நோய்கள் நம்மை அண்டாது.
ஆயுர்வேத மருந்துகளில் உடலில் வலியை போக்கும் சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன. அவைகள் சரியான நோய்க்கு, வலிக்கு பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பக்க விளைவுகளை எற்படுத்தக் கூடியவைதான்.
ஆனால் தகுந்த மருத்துவரை நாடி, உரிய மருந்துக்களை எடுத்துக் கொண்டால் எந்த பாதிப்பும் இல்லை.
நீங்களாகவே ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடக் கூடாது. சில மருந்துகளை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என ஆயுர்வேதத்திலேயே குறிப்பிட்டுள்ளது. ஆகவே ஆயுர்வேதமாய் இருந்தாலும் எந்த மருந்துகளையும் கவனமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
Average Rating