டிஸ்கவரி புகழ் பியர் கிரில்ஸ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்…!!
அடர்ந்த அமேசான் காடுகளாக இருந்தாலும் சரி, வெயில் வாட்டி எடுக்கும் சஹாரா பாலைவனமாக இருந்தாலும் சரி, நான்கு பக்கமும் தண்ணீர் மட்டுமே சூழ்ந்துள்ள தனி தீவாக இருந்தாலும் சரி, மக்கா… வாழ்வே முடியாது எனும் இடத்திலும் அங்கிருக்கும் புல், பூண்டை வைத்து வாழ்ந்து காட்டும் அசாத்திய மனிதன் தான் பியர் கிரில்ஸ்.
டிஸ்கவரி சேனல் தமிழில் அறிமுகமான நாள்முதல் பெரும்பாலான தமிழர்களுக்கு இவர் மிகவும் பரிச்சயமான நபராக திகழ்ந்து வருகிறார். இவரை கண்டால் சிங்கம், புலி, பாம்பு, எலி அனைத்தும் நடுங்கும்.
எப்போது எதை பிடித்து, வறுத்து சாப்பிடுவார் என்றே கூற முடியாது. எப்படியும் வாழலாம், இப்படியும் வாழலாம் என வாழ்ந்துக் காட்டிக் கொண்டிருப்பவர் தான் பியர் கிரில்ஸ்.
* பியர் கிரில்ஸின் உண்மையான பெயர் எட்வார்ட் மைக்கல் கிரில்ஸ் ஆகும். இவரது சகோதரி இவருக்கு வைத்த புனைப்பெயர் தான் பியர் (Bear). இவர் வளர, வளர இவரது சகோதரி வைத்த பெயரே அனைவரும் அழைக்கும் பெயராக மாறிப்போனது.
* பியர் கிரில்ஸ் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் (Second Dan Black Belt In Shotokan Karate) வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* பியர் கிரில்ஸ் SAS (Special Air Service)-ல் இருப்புவீரர்கள் (Reservist) படையில் மூன்று வருடங்கள் சேவை புரிந்துள்ளார்.
* SAS-ல் சேவை புரிந்துக் கொண்டிருந்த காலத்தில் 1996-ம் ஆண்டு ஒரு முறை பாராசூட்டில் இருந்து ஸ்கைடைவ் செய்த போது 16,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார் பியர் கிரில்ஸ். இதனால் இவரது முதுகெலும்பு மூன்று துண்டுகளாக உடைந்தன.
* இந்த விபத்து நடந்த 18 மாதங்களில் பியர் கரில்ஸ் எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி சாதனை புரிந்தார். இந்த சாதனையை செய்த போது பியர் கிரில்ஸ்-க்கு வயது 23. இது 1998-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம்பெற்றது.
* மலை ஏறும் போது கால்களை இழந்த தனது நண்பருக்கு ஃபண்ட்ஸ் சேகரிப்பதற்காக தேம்ஸ் ஆற்றை நிர்வாணமாக சாதாரண பாத்-டப்பில் துடுப்பு செய்து கடந்தார் பியர் கிரில்ஸ்.
* மிக உயரத்தில் ஏர்-பலூன்-ல் அமர்ந்து டின்னர் பார்ட்டி செய்த சாதனையும் பியர் கிரில்ஸ் வசம் தான் உள்ளது. இவர், 7,600 அடியில் இந்த சாதனையை செய்தார்.
* இவர் தனது சுய சிறுநீர் மற்றும் இறந்த மிருகங்களின் இதயங்களை உண்ணும் பழக்கம் கொண்டுள்ளவர்.
* ஒருமுறை அட்லாண்ட்டிக் முதல் ஆர்டிக் கடல் வரை ஓர் திறந்த வகை படகில் பயணித்துள்ளார் பியர் கிரில்ஸ்.
* பியர் கிரில்ஸ் இதுவரை 11 புத்தகங்கள் எழுதியுள்ளார். இது மிஷன் சர்வைவல் (Mission Survival) எனும் புத்தகம் மிகவும் பிரபலமானது ஆகும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating