இல்லறம் இன்பமயமா இருக்க நீங்க இந்த 8 விஷயம் செஞ்சுருக்கீங்களா..?

Read Time:4 Minute, 12 Second

27-1464347221-1eightwaystomakeyourrelationshipincredibleஎல்லாருமே இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால், யார் யாரெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை சரியாக கடந்து போகிறார்களோ அவர்கள் மட்டும் தான் இல்லறத்தை அடுத்த கட்டத்திற்குக் எடுத்து செல்கின்றனர்.

உண்மையில் உடல் சார்ந்த ரீதியில் காணும் இன்பத்தை விட, மனம் சார்ந்த ரீதியில் கிடைக்கும் இன்பம் தான் மிகுதியானது மற்றும் நிலையானது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஜஸ்ட் இங்கு கூறியிருக்கும் எட்டு விஷயங்களை உங்கள் வாழ்வில் சரியாக பின்பற்றி, செயல்முறையில் நடைமுறைப்படுத்தி வந்தாலே போதுமானது.

கேட்க வேண்டும்! புடவை, நகை, முத்தம் அல்ல, ஒருவர் மற்றொருவர் என்ன சொல்கிறார், என நினைக்கிறார் என்பதி காதையும், மனதையும் கொடுத்து கேட்க வேண்டும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் பேசுவதை காது கொடுத்து கேட்க ஆரம்பித்தாலே இல்லறம் சிறக்க ஆரம்பித்துவிடும்.

செயல்பாடு #2

ஒப்புக்கொள்ள வேண்டும்! தவறு செய்தால் ஒப்புக்கொள்ளுங்கள். நாம் ஏதோ கொலை குற்றம் செய்துவிடவில்லை. அதே போல மன்னிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் தவறுகள் குறையும்.

செயல்பாடு #3

வலுவூட்டுங்கள்! கணவன் மனைவி உறவு என்பது சமையலறையில் ஆரம்பித்து, படுக்கையறையில் முடிவதல்ல. வெற்றி, தோல்வி ஏற்படும் போது, ஏற்ற இறக்கங்கள் காணும் போது ஒருவரை ஒருவர் வலுவூட்ட வேண்டும்.

செயல்பாடு #4

நேர்மை! இல்லறம் மட்டுமின்றி அனைத்து உறவுகளின் நிலைபெற்று இருக்க வேண்டும் எனில், அந்த உறவில் நேர்மை எனும் அஸ்திவாரம் வலுவாக இருக்க வேண்டும். நேர்மை இல்லாத உறவு மெல்ல, மெல்ல சீட்டுக்கட்டு கோட்டை போல சரிந்து விழ துவங்கிவிடும்.

செயல்பாடு #5

சுதந்திரம்! ஒருவர் மற்றொருவருடைய சுதந்திரத்தில் குறுக்கிடாமல் இருக்க வேண்டும். அதே போல, பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். எந்த வகையிலும் கணவன், மனைவி உறவை அடிமைத்தனமாக மாற்றிவிட கூடாது.

செயல்பாடு #6

மகிழ்ச்சி! சந்தோசமாக இருங்கள். சிரிக்க வைக்கவும், சிரிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். அப்பா என்றால் எச்.எம்-ஐ பார்ப்பது போல பயம் வரக் கூடாது நண்பனை போன்ற நெருக்கம் வர வேண்டும்.

செயல்பாடு #7

பாராட்டுங்கள்! வாய் திறந்து மட்டுமல்ல, மனம் திறந்தும் பாராட்டுங்கள், கணவன் / மனைவி உங்களுக்கு செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள். இந்த பாராட்டுக்கள் தான் பின்னாளில் உங்கள் உறவு சிறக்கவும், இன்னாளில் இணைப்பு அதிகரிக்கவும் உதவும்.

செயல்பாடு #8

அரவணைப்பு! அன்பு, பாசம், நேசம், காதல் சரியான அளவு இல்லாத உறவு உப்பு, காரம், மசாலா இல்லாத மதிய உணவை போல ருசிக்காது. எனவே, அவ்வப்போது கொஞ்சுங்கள். அவ்வப்போது காதலை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வலிகாமம்; ஆசிரியரின் பாலியல் தேவைக்கு, புதிய மாணவிகள்……..?
Next post தூக்க மாத்திரைகளைப் பற்றி சில தகவல்கள் – தெரிந்து கொள்ளுங்கள்…!!