வலிகாமம்; ஆசிரியரின் பாலியல் தேவைக்கு, புதிய மாணவிகள்……..?
வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட சங்கானைக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான அங்க சேட்டைகளில் ஈடுபட்டமையால் அவரை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய வலிகாமம் வலயக் கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகின்றது.
குறித்த ஆசிரியர் வன்னிப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் பணியாற்றியபோது அங்கும் இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டமையால் சங்கானைக் கோட்டப் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டவர். இந்தப் பாடசாலையிலும் இவர் தொடர்ந்து இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இவரது தொல்லைகள் தாங்க முடியாத மாணவிகள் இது தொடர்பாக அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அதிபர் தனது பாடசாலையிலுள்ள ஆசிரியைகள் சிலர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
இதன்போது மாணவிகள், குறித்த ஆசிரியர் தங்கள் அங்கங்களில் கையால் தொடுவது, தடியால் தட்டுவது, கதிரைகளை விட்டுக் கீழே இறங்கி இருக்குமாறு கூறுவது போன்று பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் என்று வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து நடவடிக்கையில் ஈடுபட்ட அதிபர், குறித்த ஆசிரியரை மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று நிறுத்தியதுடன் இந்த விடயத்தை வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனால் வலயக் கல்வி அலுவலகம் அந்த ஆசிரியரை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஆக, குறித்த ஆசிரியரின் பாலியல் இச்சைக்காக வலயக் கல்வி அலுவலகம் புதிய மாணவிகளை வழங்கவிருக்கின்றது.
அசட்டுத் துணிச்சலுடன் அதிகாரிகள் செய்கின்ற இவ்வாறான நடவடிக்கைகள்தான் தவறுகள் பெருகுவதற்கு காரணமாக அமைகின்றன.
தவறு செய்பவருக்கு எடுக்கின்ற ஒழுக்காற்று நடவடிக்கையானது அவரை திருத்துவதாக இருக்கவேண்டுமே தவிர, அவர் மேலும் மேலும் தவறுகள் செய்வதற்கான களங்களை உருவாக்கி கொடுப்பதாக இருக்கக்கூடாது.
எனவே, குறித்த ஆசிரியருக்கு ஆகக்குறைந்தது மூன்று மாதங்கள் சம்பளமற்ற விடுமுறை வழங்கி அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆசிரியரின் தவறை அம்பலப்படுத்த வேண்டும். அதன் மூலமே அவர் திருந்த வழியேற்படுவதுடன் ஏனைய ஆசிரியர்களுக்கும் இது பாடமாக அமையும்.
வலிகாமம் வலயக் கல்வி அலுவலகம் இந்தச் செயற்பாட்டை செய்யுமா? அல்லது இடமாற்றம் வழங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating