எகிப்திய பெண்களின் அழகின் ரகசியம் இதுதானாம்….!!

Read Time:4 Minute, 11 Second

egypt_007.w540எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவை எளிதில் மறக்க முடியாது. அவர் பாலில் குளிப்பார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவரின் அழகு ரகசியங்களை இன்றும் அங்கே பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.

அழகு என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். ஆனால் அழகுணர்ச்சி மாறுபடுவதில்லை. நம்ம ஊரில் மஞ்சளும் பயிற்றம் மாவு போல் அவர்கள் நாட்டில் என்ன மாதிரியான அழகுக் குறிப்புகளை உபயோகப்படுத்திகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆவல்தானே. இதோ அவர்களின் எளிய அழகுக் குறிப்புகள்.

பாலும் தேனும்:

பாலையும் தேனையும் கலந்து உடல் முழுக்க தேய்த்து குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் அந்த ஊரிலுள்ள பெண்கள். இவை சருமத்தில் ஈரப்பதம் அளித்து மிருதுவாக்கின்றன.

தேங்காய் மற்றும் ஷீயா பட்டர்:

தேங்காய் மற்றும் நட்ஸ்களிலிருந்து பிரிக்கப்படும் வெண்ணெயான ஷீயா பட்டர் இரண்டையுமே கூந்தலுக்கான கண்டிஷனராகவும், சிகை அலங்காரத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.

கடல் உப்பு:

நாம் கடலை மாவு உபயோகப்படுத்துவது போல, அவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து அதனை உடல் மற்றும் முகத்திற்கு தேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவை சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றி, மென்மையாக்கும்.

வெந்தயம்:

அவர்கள் வெந்தயத்தை அரைத்து முகத்தில் தேய்த்து கழுவுகிறார்களாம். அதேபோல் வெந்தய டீ யை விரும்பி குடிக்கின்றனர். இவை ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளவை என்பதால், இளமையை நீட்டிக்கவும், சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிரது என்று சொல்கிறார்கள்.

பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெயை முகத்தில் தேய்த்து குளிப்பதை அவர்கள் விரும்புகின்றனர். இவை முகத்திற்கு நெகிழ்வுத்தன்மையையும், மென்மையையும் தருகிறது. இளம் வயதில் வரும் சருமம் முதிர்வதை தடுக்கின்றது.

இயற்கை அழகு சாதனங்கள்:

அவர்கள் மேக்கப் செய்ய கெமிக்கல் கலந்த அழகு சாதனங்களை விரும்புவதில்லை. மருதாணி கை நகங்களுக்கும், தலைக்கு நிறம் அளிக்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும், பீட்ரூட் காய வைத்து பொடி செய்து அவற்றை லிப்ஸ்டிக்காகவும், கண்ணிமைகளுக்கு வண்ணமாகவும் தீட்டுகின்றனர்.

காய்ந்த பாதாமை எரித்து, அந்த கரியில் கண்மை செய்து கண்ணிற்கு போட்டுக் கொள்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னெவென்றால் கண்ணிற்கு அழகுபடுத்த வைக்கும் கண்மை கண்டுபிடித்தது அவர்கள் நாட்டில்தான். கி.மு 10,000 ஆண்டுகளிலேயே, அவர்கள் கண்ணிற்கு மை வைப்பதை வழக்கப்படுத்தியுள்ளனர்.

சோற்றுக் கற்றாழை:

சோற்றுக் கற்றாழை இல்லாமல் அவர்களின் அழகுப் பொருட்கள் எதுவுமே பார்க்க முடியாது என்கின்றனர். எல்லாவித அழகு சாதனங்களுக்கும் அவர்கள் இதனை உபயோகப்படுத்துகிறார்கள்.இது சுருக்கங்கள் இல்லாத சருமத்தையும் , பளபளப்பையும் தருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களால், படுக்கையறையில் பெண்கள் அசௌகரியமாக உணரும் 9 விஷயங்கள்…!!
Next post அமெரிக்க இரவு விடுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழப்பு…!!