சென்னையில் பட்டப்பகலில் 130 பவுன் நகை-பணம் கொள்ளை…!!

Read Time:3 Minute, 55 Second

201606110235137707_Chennai-near-jewelry-money-robbery_SECVPFசென்னை ராயபுரத்தில் பட்டப்பகலில் அடகு கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரம், ஆதாம் சாகிப் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). இவருடைய மனைவி பிரபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் ரமேஷின் தாயார் மைனாவும் வசித்து வருகிறார்.

ரமேஷ் தனது வீட்டின் ஒரு பகுதியிலேயே ‘மகேஸ்வரர் சந்த் ராங்கா’ என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு அவருடைய வீட்டில் இருந்து செல்வதற்கு ஒரு வழியும், மெயின் வாசல் ஒன்றும் உள்ளது. இந்த கடையில் ஜெகதீசன்(13) என்ற சிறுவன் வேலை பார்த்து வருகிறான்.

அடகுகடை இருந்த தெரு குறுகலாக இருந்தாலும் பகலில் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். நேற்று காலை 10.30 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்மநபர்கள் திடீரென ரமேஷ் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு இருந்த ரமேஷின் தாயார் மைனாவை கட்டிப்போட்ட அவர்கள், வீட்டில் இருந்து கடைக்கு செல்லும் வழியாக கடைக்குள் புகுந்தனர்.

மர்மநபர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் சத்தம்போட முயன்றார். அதற்குள் மர்மநபர்கள் அவரை சத்தம் போடவிடாமல் வாயை பொத்தினார்கள். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி, கடையிலேயே அவரை கட்டிப்போட்டனர்.

கடையில் இருந்த சிறுவனையும் கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த ரூ.10 லட்சம் பணம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 130 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றுவிட்டனர்.

அதன்பிறகு கடைக்கு வெளியே வந்த சிறுவன், திருடன் திருடன் என கூச்சலிட்டான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் கடையில் கட்டிப்போட்டு இருந்த ரமேசை விடுவித்தனர். இதுபற்றி ராயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராயபுரம் போலீசார், கொள்ளை நடந்த அடகு கடையில் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் கடைக்குள் வந்த தடயத்தையும் ஆய்வு செய்தனர்.

அடகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் முகம் பதிவாகி உள்ளதா? என கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் நிர்வாணமாக அமர்ந்து சாப்பிடும் ஓட்டல்..!!
Next post மனைவி நடத்தையில் சந்தேகம்: கிணற்றில் வீசி 2 வயது மகனை கொன்ற கொடூர தந்தை கைது…!!