2015ல் 5 லட்சம் சாலை விபத்துகள்.. 1.46 லட்சம் பேர் பலி.. இளைஞர்களே அதிகம்… மும்பை மோசம்…!!

Read Time:3 Minute, 59 Second

10-1465556371-accident46572015ம் ஆண்டு நாடு முழுவதும் 5 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1.46 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். மும்பையில்தான் அதிக அளவிலான விபத்துகள் நடந்துள்ளன என்று புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் சாலைப் பாதுகாப்பு என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. சாலை விபத்துகள் நடக்காத நாடே இல்லை. குறிப்பாக இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு இது பெரும் சவாலாகவே வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு 16 பேர் இறந்து வருவதாகவும், ஒரு நிமிடததிற்கு ஒரு பயங்கர சாலை விபத்து நடப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நாட்டிலேயே அதிக அளவிலான சாலை விபத்துகள் மும்பையில்தான் நடந்துள்ளன. அதேசமயம், அதிக அளவிலான உயிரிழப்புகள் நடந்திருப்பது டெல்லியில். மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்தியாவில் சாலை விபத்துகள் என்ற புள்ளிவிவரத் தொகுப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

23,468 விபத்துகள் கடந்த ஆண்டில் மும்பையில் 23,468 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதேசமயம், டெல்லியில் அதிக அளவிலான உயிரிழப்புகள் நடந்துள்ளன. அதாவது 1622 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 லட்சம் சாலை விபத்துகள் நாடு முழுவதும் கடந்த ஆண்டு 5 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1.46 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

13 மாநிலங்களில்தான் அதிகம் இந்தியாவில் 13 மாநிலங்களில்தான் அதிக அளவிலான சாலை விபத்துகள் அதாவது நாட்டின் மொத்த விபத்துகளில் 87.2 சதவீத விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உ.பி. குஜராத் ஆகியவை அதில் சில.

ஹிட் அன்ட் ரன் நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் 11.4 சதவீதம் விபத்துகள் ஹிட் அன்ட் ரன் எனப்படும் மோதி விட்டு நிற்காமல் செல்லும் வாகன விபத்துகள்தான். ஓவர் லோட் வாகனங்களால் 77,116 விபத்துகள் நடந்துள்ளன. 25,199 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த ஆண்டு 28.4 சதவத விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளன. மாநில நெடுஞ்சாலைகளில் 24 சதவீத விபத்துகள் நடந்துள்ளன. பிற சாலைகளில் நடந்த விபத்துகள் 47.6 சதவீதமாகும்.

ஓட்டுநர்களின் தவறு 77 சதவீத சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் தவறுதான் காரணமாக இருந்துள்ளது. அதில் ஓவர் ஸ்பீடு காரணமாக நடந்த விபத்துகள் 62.2 சதவீதமாகும். டிரைவர்கள் மது அருந்தியதால் விபத்தை ஏற்படுத்தியது 4.2 சதவீதமாகும்.

இளைஞர்களே அதிகம் பலி சாலை விபத்துகளில் அதிக அளவில் பலியாவது இளைஞர்கள்தான். அதாவது 15 முதல் 24 வயதுக்குட்பட்டோர்தான் 33 சதவீத அளவுக்கு பலியாகியுள்ளனர் என்பது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வளர்த்து வந்த ஆடுகளை விற்று வீட்டில் கழிவறை கட்டிய கூலித்தொழிலாளி..!!
Next post காகித ஆலையில் பிடிக்க பிடிக்க சிக்கிய 156 பாம்புகள்…!!