மார்பகங்களைப் பெரிதாக்குவதற்கான சத்திரசிகிச்சையால் கங்காருவின் தாக்குதலில் உயிர் பிழைத்ததாகக் கூறும் பெண்..!!

Read Time:2 Minute, 18 Second

timthumb (1)அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், மார்­ப­கங்­களைப் பெரி­தாக்­கு­வ­தற்­கான சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொண்­டி­ருந்­ததால், கங்­கா­ருவின் தாக்­கு­த­லின்­போது உயிர் தப்­பி­ய­தாகக் கூறு­கிறார்.

தெற்கு அவுஸ்­தி­ரே­லிய மாநி­லத்தைச் சேர்ந்த ஷெரோன் ஹென்ரிச் (45) ஹெலன் சால்டர் ஆகிய இரு பெண்கள் சுற்­றுலா பகு­தி­யொன்றில் சைக்கிள் சவா­ரியில் ஈடு­பட்­டி­ருந்­த­போது இரு­வரும் கங்­கா­ருவின் தாக்­கு­த­லுக்­குட்­பட்­ட­னர்.

இதன்­போது ஷெரோன் ஹென்­ரிக்கின் மீது மேற்­படி பாரிய கங்­காரு பாய்ந்து அவரின் உடலின் மீது தனது கால்­களைப் பதித்­தது. பின்னர் ஹெலன் சால்­டரின் முது­கையும் அக்­ கங்­காரு தாக்­கி­யது.

இத்­ தாக்­கு­தலில் ஷெரோன் ஹென்ரிக் படு­கா­ய­ம­டைந்தார். அவரின் 3 விலா எலும்பு­களை மாற்­றீடு செய்ய வேண்­டி­யி­ருப்­ப­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­தனர். அத்­துடன், அவரின் மார்­ப­கங்­களைப் பெரி­தாக்­கு­வ­தற்­கான சத்­தி­ர­சி­கிச்­சை­யின்­போது, மார்­ப­கங்­க­ளுக்குள் வைக்­கப்­பட்ட சிலிக்கான் பைகளும் சேத­ம­டைந்­தன.

எனினும், இந்த பைகள் கார­ண­மா­கவே தான் உயிர் தப்­பி­ய­தாக ஷெரோன் கூறு­கிறார். இவை உயிர்­காப்பு காற்றுப் பைகள் (எயார் பேக்) போன்று செயற்­பட்­ட­தாக ஷெரோன் தெரி­வித்­துள்ளார்.

அக்­ கங்­காரு பார்ப்­ப­தற்கு அழ­காக தென்பட்ட போதிலும் அது பாய்ந்து தாக்கிய போது தானும் ஹெலனும் சுமார் ஒன்றரை மீற்றர் தூரம் பறந்து வீழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுத கிடங்குகள் வெடிப்பு! மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை..!!
Next post முன்னாள் காதலியின் நெருக்கமான வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட காதலர்..!!