சென்னை பெண் குளிப்பதை ஆபாசமாக படம் எடுத்து பேஸ்-புக்கில் வெளியிட்டவர் கடத்தி கொலை…!!
புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் அருகே உள்ள பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 29). திருமணம் ஆகாதவர்.
கவாஸ்கரின் தாயார் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது பாட்டி பட்டு பராமரிப்பில் வசித்து வந்தார்.
பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அன்பு (43). கப்பல் வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார். அன்பு குடும்பத்தினர் கவாஸ்கர் மீது பாசமாக இருந்து வந்தனர். இதனால் கவாஸ்கர் அன்பு வீட்டுக்கு அடிக்கடி செல்வார்.
இந்த நிலையில் அன்புவின் மனைவி நந்தினி குளியல் அறையில் குளிப்பதை கவாஸ்கர் ரகசியமாக செல்போனில் படம் எடுத்துள்ளார். அந்த படத்தை நந்தினியிடம் காட்டி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.
இதுபற்றி நந்தினி தனது கணவரிடம் கூறினார். கவாஸ்கரை எச்சரித்து சென்னையில் இருந்து விரட்டி விட்டனர்.
இதனால் புதுவை வந்த கவாஸ்கர் பிள்ளையார் குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அங்குள்ள ஊழியர் குடியிருப்பிலேயே தங்கி இருந்தார்.
அதே நேரத்தில் நந்தினி குளித்த காட்சி படங்களை பேஸ்புக் இணைய தளத்தில் வெளியிட்டார். நந்தினி பெயரில் போலியாக முகவரியை உருவாக்கி அதன் மூலம் இந்த படங்களை வெளியிட்டு இருந்தார்.
இந்த படங்களை நந்தினியின் உறவினர்கள் பார்த்து அன்புவிடம் தகவல் தெரிவித்தனர். இதனால் அன்பு ஆத்திரம் அடைந்தார். கவாஸ்கரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
கடந்த மாதம் 25-ந்தேதி அன்பு, நந்தினி, ராயபுரத்தை சேர்ந்த மீன் வியாபாரி கார்த்திக் மற்றும் புகழேந்தி ஆகிய 4 பேர் சென்னையில் இருந்து ஒரு காரில் புதுவை சென்றனர்.
கவாஸ்கர் வேலை பார்த்த ஓட்டலுக்கு சென்று கவாஸ்கரை சந்தித்தனர். பின்னர் அவரிடம் நைசாக பேசி சென்னைக்கு வருமாறு அழைத்தனர். அதை ஏற்றுக்கொண்ட கவாஸ்கர் அவர்களுடன் சென்றார்.
ஆனால், வழியிலேயே கவாஸ்கரை அடித்து உதைத்தார்கள். பின்னர் கை-கால்களை கட்டினார்கள்.
மகாபலிபுரம் அருகே உள்ள பட்டிப்புலம் என்ற இடத்துக்கு சென்று அங்கிருந்து கவாஸ்கரை காரில் இருந்து இறக்கினார்கள்.
மறைவான இடத்துக்கு கொண்டு சென்று அவரை உயிரோடு மரத்தில் தூக்கில் தொங்க விட்டனர். சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அனைவரும் தப்பி சென்று விட்டனர்.
இதற்கிடையே கவாஸ்கரை காணாமல் அவரது உறவினர்கள் புதுவை கிருமாம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்தபோது கவாஸ்கரை அன்பு காரில் அழைத்து சென்ற விஷயம் தெரிய வந்தது. அன்புவை பிடித்து விசாரித்த போது கவாஸ்கரை கொலை செய்த விஷயத்தை கூறினார்.
போலீசார் பட்டிப்புலம் சென்று பார்த்தனர். அங்கு கவாஸ்கரின் பிணம் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தது. அதை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அன்புவும் அவருடைய கூட்டாளி கார்த்திக்கும் கைதானார்கள். நந்தினி, புகழேந்தி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
Average Rating